வியாபார நஷ்டத்தால் 4 வயது மகனை கொன்றுவிட்டு தானும் தற்கொலைக்கு முயற்சி... கொடூர தந்தைக்கு 10 ஆண்டுகள் சிறை!

கோப்புப்படம்
கோப்புப்படம்

தனது 4 வயது மகனை கொன்று, தானும் தற்கொலைக்கு முயன்ற வழக்கில் ஊர்மிள் எஸ்.டோலியா என்பவருக்கு 10ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் 2ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சென்னை, வடபழநியில் மொபைல் சர்வீஸ் கடையில் வேலை செய்து வந்தவர் ஊர்மிள் எஸ்.டோலியா. கடையில் வியாபாரம் சரிவர நடக்காததால் மன உளைச்சலடைந்த அவர் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்து, கடந்த 2018ஆம் ஆண்டு மார்ச் 16ஆம் தேதி, தேனாம்பேட்டையில் உள்ள தன்னுடைய வீட்டிலிருந்து இரவு தன்னுடைய 4வயது இளைய மகன் மாதவ்வை அழைத்துக்கொண்டு மொபைல் கடைக்கு சென்று யாரும் இல்லாத நேரத்தில் சிறுவனின் இரண்டு கை மணிக்கட்டுகளையும் கத்தியால் அறுத்து, தானும் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

கோப்புப்படம்
கோப்புப்படம்

நீண்ட நேரமாகியும் கணவரும், மகனும் வீட்டிற்கு திரும்பாததால் டோலியாவின் மனைவி கலைச்செல்வி, கணவர் வேலை செய்யும் மொபைல் சர்வீஸ் கடையில் மேனேஜருக்கு போன் செய்து தகவல் கேட்டறிந்த போது கடையினுள் சிறுவனும், டோலியாவும் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அருகில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையிடம் தெரிவித்துள்ளார். பின்னர் இருவரையும் ஆம்புலன்சில் ஏற்றிக்கொண்டு அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்போது, சிறுவன் ஏற்கெனவே இறந்துவிட்டதாகவும் டோலியா பிழைத்துக்கொண்டதாகவும் தெரிவித்தார்.

கொலை
கொலை

இச்சம்பவம் குறித்து ஊர்மிள் எஸ்.டோலியா மீது வடபழனி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி சிறையில் அடைத்தனர். கொலை சம்பவம் குறித்து ஜார்ஜ் டவுனில் உள்ள 16வது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி புவனேஸ்வரி முன் வழக்கு விசாரணை நடைபெற்று வந்துள்ளது. அரசு தரப்பில் ஆஜரான குற்றத்துறை வழக்கறிஞர் டி.மகாராஜன், 21 சாட்சிகளிடம் விசாரிக்கப்பட்டதில் ஊர்மிள் எஸ்.டோலியா தான் குற்றவாளி என ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார். அதற்கு குற்றம்சாட்டப்பட்டவர் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதுடன் ஜாமீன் கோரப்பட்டது.

நீதிமன்றம் தீர்ப்பு
நீதிமன்றம் தீர்ப்பு

நீண்ட நாட்களாக விசாரணையில் இருந்துவந்த இந்த வழக்கில் இன்று நீதிபதி வழங்கிய தீர்ப்பில், ஊர்மிள் எஸ்.டோலியா என்பவர் மீது சாட்டப்பட்ட குற்றங்கள் அனைத்தும் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபணம் ஆனதால் அவர் குற்றவாளி என கருதப்பட்டு அவருக்கு 10ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், 2ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

அபராதத்தை செலுத்த தவறினால் மேலும் ஓராண்டு மெய்க்காவல் சிறை தண்டனையும் அனுபவிக்க வேண்டும் என்றார். ஜாமீன் கோரி ஊர்மிள் எஸ்.டோலியா தாக்கல் செய்த மனுவை ரத்து செய்து நீதிபதி புனவேஸ்வரி உத்தரவிட்டார்.

இதையும் வாசிக்கலாமே...

ராகுல் காந்தியின் ஆண்மையை பரிசோதிக்க தாய், மகள்களை அவருடன் தூங்க அனுப்புங்கள்... காங்கிரஸ் பிரமுகரின் சர்ச்சை பேச்சு!

கைதானவங்க நம்மாளுங்க தான்; ஆனா ரூ.4 கோடி எனதில்லை... நயினார் நாகேந்திரன் விளக்கம்!

அதிர்ச்சி... ஜிஎஸ்டி அலுவலகத்தில் அதிகாரியின் மண்டை உடைப்பு: சென்னையில் பரபரப்பு!

நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு... நாட்டின் கவனம் ஈர்க்கும் நட்சத்திரத் தொகுதிகள் இவைதான்!

முன்பு முதலை, இப்போது சிறுத்தை... படுகாயங்களுடன் உயிர் பிழைத்த முன்னாள் கிரிக்கெட் வீரர்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in