அணைப்பகுதியில் ஆடு மேய்க்கச் சென்றவர் காட்டு மாடு தாக்கி பலி - திண்டுக்கல்லில் சோகம்

காட்டுமாடுகள் கூட்டம் (கோப்பு படம்)
காட்டுமாடுகள் கூட்டம் (கோப்பு படம்)
Updated on
1 min read

திண்டுக்கல் அருகே அணைப்பகுதியில் ஆடு மேய்க்கச் சென்றவர் காட்டுமாடு தாக்கியதில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே குதிரையாறு அணை அமைந்துள்ளது. அடர்ந்த வனப்பகுதி என்பதால் இங்கு காட்டு யானை, சிறுத்தை, மான்கள், காட்டு மாடுகள் உள்ளிட்ட ஏராளமான விலங்குகள் வசித்து வருகின்றன. இந்த பகுதியில் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் தங்களது கால்நடைகளை மேய்ப்பதற்காக செல்வது வழக்கம்.

குதிரையாறு அணை
குதிரையாறு அணை

அந்த வகையில் அழகாபுரி பகுதியைச் சேர்ந்த வலசுதுரை என்பவர் ஆடுகளை மேய்ப்பதற்காக நேற்று காலை சென்று இருந்தார். ஆனால் இரவு வெகுநேரமாகியும் அவர் வீடு திரும்பாததால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து வனத்துறையினர் அடர்ந்த வனப் பகுதிக்குள் சென்று பார்த்த போது, அணை அருகே வலசுதுரை ரத்த காயங்களுடன் உயிரிழந்து கிடப்பது தெரியவந்தது.

உயிரிழப்பு
உயிரிழப்பு

வனத்துறை நடத்திய முதல் கட்ட ஆய்வில், வலசுதுரை காட்டுமாடு தாக்கியதில் குடல் சரிந்து உயிரிழந்திருக்கலாம் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரது உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை கொண்டு வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in