பரபரப்பு… அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீது இன்று தீர்ப்பு!

பரபரப்பு… அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீது இன்று தீர்ப்பு!

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் அமைச்சா் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீதான தீர்ப்பை, சென்னை உயர்நீதிமன்றம் இன்று வழங்குகிறது.

சட்டவிரோதப் பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் கடந்த ஜூன் 14-ஆம் தேதி அமைச்சா் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தது. ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட இரு மனுக்களை சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இதையடுத்து ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. உடல் நிலையை கருத்தில் கொண்டு ஜாமீன் வழங்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஜாமீன் மனு விசாரணைக்கு வந்தபோது, செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞா் என்.ஆா்.இளங்கோ, உள்நோக்கத்துடன் அவா் சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா் என வாதிட்டாா். அமலாக்கத்துறை தரப்பு மூத்த வழக்கறிஞா் ஏ.ஆா்.எல்.சுந்தரேசன், செந்தில் பாலாஜி அலுவலகத்தில் இருந்து கைப்பற்றப்பட்ட பென் டிரைவில் இருந்து சேகரிக்கப்பட்ட தகவலின்படி, வேலை பெற்றுத் தருவதாக கூறி ரூ. 67.75 கோடி பணம் பெற்றது தெரிய வந்துள்ளதாக கூறினார்.

மேலும், செந்தில் பாலாஜியின் சகோதரா் அசோக்குமாா் தொடா்ந்து தலைமறைவாக உள்ள நிலையில், ஜாமீன் வழங்கினால் அவா் சாட்சிகளை கலைத்து விடுவாா் என வாதிட்டாா். இந்த வழக்கில் செந்தில் பாலாஜி குற்றம் செய்தாா் என்பதை அமலாக்கத் துறையால் நிரூபிக்கவே முடியாது என செந்தில் பாலாஜி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி வழக்கின் தீா்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தாா். இந்நிலையில், அமைச்சா் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீது சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in