பாம்புக்கு சிபிஆர் சிகிச்சை... வாயோடு வாய் வைத்து உயிர்கொடுத்த போலீஸ் - வைரல் வீடியோ!

பாம்புக்கு சிபிஆர் சிகிச்சை... வாயோடு வாய் வைத்து உயிர்கொடுத்த போலீஸ் - வைரல் வீடியோ!

பூச்சிக் கொல்லி மருந்தில் விழுந்து மயங்கிய பாம்பை காவலர் ஒருவர் உயிர் பிழைக்க வைத்த அதிசயம் நிகழ்ந்துள்ளது.

மனிதர்களுக்கு சிபிஆர் எனப்படும் அவசர சிகிச்சை மூலம் உயிரை திரும்ப வரவழைத்த அதிசயங்கள் நிகழ்ந்துள்ளது அனைவரும் அறிந்ததுதான். ஆனால், மயக்கம் அடைந்த பாம்புவுக்கு சிபிஆர் சிகிச்சை முறை மூலம் உயிர் கொண்டு வந்துள்ளார் போலீஸ்காரர் ஒருவர்.

மத்தியப்பிரதேச மாநிலம் நர்மதாபுரம் பகுதியில் பாம்பு ஒன்று விவசாய நிலத்தில் வைக்கப்பட்டிருந்த பூச்சிக்கொல்லி மருந்தின் மீது விழுந்து மயங்கியது. அப்போது பாதுகாப்பு பணிக்காக சென்றிருந்த காவலர் ஒருவர் உடனடியாக அந்த பாம்புவை காப்பாற்றும் முயற்சியில் இறங்கினார்.

அவர் துரிதமாக செயல்பட்டு வாயோடு வாய் வைத்து ஊதி அந்த பாம்புக்கு மீண்டும் உயிர் கொடுத்தார். இது தொடர்பான வீடியோ சக காவலர்களால் பதிவு செய்யப்பட்டு இணையத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

அந்த காவலரின் செயலுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். அதே நேரத்தில் இதனை அனைவரும் முயற்சிக்க வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பாம்புகளை கையாளத் தெரிந்தவர்கள் மட்டும் இது போன்ற சிகிச்சையை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in