
ராசிபுரத்தில் தனியார் மற்றும் அரசுப் பேருந்துகளில் அதிக ஒலி எழுப்பும் ஹாரன்கள் அதிகம் இருப்பதால் அவற்றை பறிமுதல் செய்து அழிக்கும் பணியில் வட்டார போக்குவரத்து அலுவலர் நித்யா உள்ளிட்ட அதிகாரிகள் ஈடுபட்டனர்.
ராசிபுரத்தில் அரசு பேருந்து மற்றும் தனியார் பேருந்துகளில் காதைக் கிழிக்கும் அளவிற்கு விதவிதமான ஒலிப்பான்களை பொருத்தியுள்ளனர். சாலையில் செல்வோர், சாலை ஓரங்களில் வசிப்போர் மற்றும் வாகன ஓட்டிகள் இதனால் பெரும் அவதிக்கு உள்ளாகிறார்கள். இது குறித்த புகார்கள் தொடர்ந்து கூறப்பட்ட நிலையில் வட்டார போக்குவரத்து அலுவலர் நித்யா அதிரடி நடவடிக்கையில் இறங்கினார்.
அவரது தலைமையில் வட்டார போக்குவரத்து அலுவலக குழுவினர் இரண்டு நாட்களாக ஒவ்வொரு பேருந்தாக ஆய்வு செய்து அதிக ஒலி எழுப்பும் ஹாரன்கள் பொருத்தி இருந்தால் அவற்றை பறிமுதல் செய்து வருகின்றனர்.
இன்று ராசிபுரம் புதிய பேருந்து நிலையத்தில் 2வது நாளாக அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அரசுப் பேருந்து மற்றும் தனியார் பேருந்துகளில் இருந்த அதிக ஒலி எழுப்பும் ஹாரன்களை அகற்றினர்.
மீண்டும் இதுபோன்ற ஹாரன்களை பயன்படுத்தினால் ஓட்டுநரின் உரிமம் பறிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்த வட்டார போக்குவரத்து ஆய்வாளர் நித்யா, பறிமுதல் செய்யப்பட்ட ஹாரன்களை அந்தந்த பேருந்துக்கும் கீழேயே வைத்து நசுக்க வைத்தார். இதனால் பொதுமக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
இதையும் வாசிக்கலாமே...
பகீர்... 250 பாலஸ்தீன குழந்தைகள் மரணம்!
பிறந்து 72 நாட்களில் 31 வகையான சான்றிதழ்கள்... உலக சாதனை படைத்த குழந்தை
க்ளாமர் லுக்கில் கெத்து காட்டும் நயன்தாரா!
மாணவர்களுக்கு சப்ளை... உல்லாச வாழ்க்கை; 3,750 போதை மாத்திரைகளுடன் 4 இளைஞர்கள் கைது