தபால் வாக்கு நிலவரம்: தமிழகத்தில் திமுக, தேசிய அளவில் பாஜக கூட்டணி முன்னிலை

திமுக, பாஜக முன்னிலை
திமுக, பாஜக முன்னிலை

மக்களவைத் தேர்தல் தபால் வாக்குகள் எண்ணிக்கையில் தமிழகத்தில் திமுக கூட்டணியும், தேசிய அளவில் பாஜக கூட்டணியும் முன்னிலை வகித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஏழு கட்டங்களாக நடைபெற்றுள்ள மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாடு முழுவதும் இன்று நடைபெறுகிறது. தமிழகத்தில் புதுச்சேரி உள்ளிட்ட 40 மக்களவைத் தொகுதிகளிலும் வாக்கும் எண்ணும் பணி காலை 8 மணி முதல் துவங்கி நடைபெற்று வருகிறது.

வாக்கு எண்ணிக்கை துவங்கிய அரை மணி நேரத்தில் காலை 8.30 மணி நிலவரப்படி தமிழ்நாட்டில் திமுக கூட்டணி 13 தொகுதிகளிலும், பாஜக ஒரு தொகுதியிலும் முன்னிலை வகிப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மக்களவைத் தேர்தல் முடிவுகள்
மக்களவைத் தேர்தல் முடிவுகள்

இதேபோல் தேசிய அளவில் பாஜக கூட்டணி 193 தொகுதிகளிலும், காங்கிரஸ் உள்ளிட்ட இன்தியா கூட்டணி கட்சிகள் 109 தொகுதிகளிலும், மற்ற கட்சிகள் 10 தொகுதிகளிலும் முனனிலை வகித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தமிழகத்தில் நெல்லை தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் முன்னிலையில் உள்ளார். தென்காசியில் அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி முன்னிலையில் உள்ளார். திருச்சி மக்களவைத் தொகுதியில் மதிமுக வேட்பாளர் துரை வைகோ முன்னிலையில் உள்ளார்.

முன்னிலையில் உள்ள வேட்பாளர்கள்
முன்னிலையில் உள்ள வேட்பாளர்கள்

தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் கனிமொழி முன்னிலையில் உள்ளார். மதுரை மக்களவைத் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சு.வெங்கடேசன் முன்னிலையில் உள்ளார். இதேபோல் மற்ற தொகுதிகளிலும் முன்னிலை நிலவரங்கள் வெளியாகி வருகின்றன.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in