நாடு முழுவதும் வாக்கு எண்ணிக்கைக்கான பணிகள் தீவிரம்... முகவர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள்

வாக்கு எண்ணிக்கை பணிகள் தீவிரம்
வாக்கு எண்ணிக்கை பணிகள் தீவிரம்

மக்களவைத் தேர்த்ல வாக்கு எண்ணிக்கை பணிகள் இன்னும் சற்று நேரத்தில் துவங்க உள்ள நிலையில், தேர்தல் ஆணையம் சார்பில் தீவிர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் 19ம் தேதி துவங்கி ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான சுமார் 64 கோடி வாக்குகளை எண்ணும் பணிகள் இன்று காலை 8 மணிக்கு தேர்தல் ஆணையம் துவங்குகிறது. இதையொட்டி வாக்கு எண்ணும் மையங்களில் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 39 வாக்கு எண்ணும் மையங்களிலும் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

வாக்கு எண்ணும் மையங்களில் தீவிர போலீஸ் பாதுகாப்பு
வாக்கு எண்ணும் மையங்களில் தீவிர போலீஸ் பாதுகாப்பு

ஒவ்வொரு வாக்கு எண்ணும் மையத்திலும் 4 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதில் மத்திய படை, மாநில காவல்துறை ஆகியோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வாக்கு எண்ணும் மையத்திற்குள் அரசியல் கட்சியின் முகவர்கள், செல்போன்கள், ஐபேட், லேப்டாப் உள்ளிட்டவற்றை எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. முகவர்கள் தேர்தல் ஆணைய அடையாள அட்டைகள் வைத்திருந்தால் மட்டுமே அவர்கள் வாக்கு எண்ணும் மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகள், 234 சட்டப்பேரவை தொகுதிகளை உள்ளடக்கி உருவாக்கப்பட்டுள்ளது.

கோவை தொகுதி திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் மற்றும் பாஜக பிரமுகர் ஜி.கே.நாகராஜ்
கோவை தொகுதி திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் மற்றும் பாஜக பிரமுகர் ஜி.கே.நாகராஜ்

ஒவ்வொரு சட்டப்பேரவை தொகுதிக்கும் 14 மேஜைகள் வீதம் அமைக்கப்பட்டுள்ளது. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை துவங்கும் நிலையில் முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும். அவை எண்ணி முடிக்கப்பட்ட பிறகு 8:30 மணிக்கு மின்னணு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கும். ஒவ்வொரு சுற்று வாக்கு எண்ணிக்கைக்கு பிறகும் தேர்தல் நடத்தும் அதிகாரி மற்றும் பார்வையாளர் கையொப்பமிட்ட பிறகு அதிகாரப்பூர்வமான எண்ணிக்கை அறிவிக்கப்படும். தமிழ்நாட்டில் மூன்று தொகுதிகளுக்கு மட்டும் அதிக மேஜைகள் போடப்பட்டுள்ளது. சோழிங்கநல்லூரில் 30, கவுண்டம்பாளையத்தில் 20, பல்லடத்தில் 18,மேஜைகள் அமைக்கப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in