நலமுடன் வீடு திரும்பினார் பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி!

எல்.கே.அத்வானி
எல்.கே.அத்வானி

உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி சிகிச்சைக்குப் பின்னர் நலமுடன் வீடு திரும்பினார்.

பாஜகவின் மூத்த தலைவரும் இந்தியாவின் முன்னாள் துணை பிரதமருமான எல்.கே.அத்வானிக்கு தற்போது 96 வயதாகிறது. வயோதிகம் மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த சில நாட்களாக அவருக்கு வீட்டிலேயே மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் நேற்று இரவு அவரது உடல்நிலை திடீரென மோசமடைந்ததைத் தொடர்ந்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அவர் உடனடியாக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். முக்கிய பாஜக தலைவர்கள் அவரது உடல் நலம் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தனர்.

எல்.கே.அத்வானி
எல்.கே.அத்வானி

இந்த நிலையில் மருத்துவர்கள் அளித்த சிகிச்சை காரணமாக எல்.கே.அத்வானியில் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து அவர் ஆம்புலன்ஸ் மூலம் வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in