பொதுமக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை கூண்டில் சிக்கியது!

கூண்டில் சிக்கிய சிறுத்தை
கூண்டில் சிக்கிய சிறுத்தை

நீலகிரி அருகே காலில் காயத்துடன் குடியிருப்பு பகுதிகளின் அருகே சுற்றித் திரிந்த சிறுத்தை, கூண்டில் சிக்கியதை அடுத்து, பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

நீலகிரி மாவட்டம் பெரும்பான்மையாக வனப்பகுதிகளை கொண்டுள்தால் அடிக்கடி குடியிருப்பு பகுதிகளின் அருகே வனவிலங்குகள் நடமாடுவது வாடிக்கை. இந்நிலையில் கூடலூர் அருகே தேவர்சோலை பேரூராட்சிக்கு உட்பட்ட பொன்வயல் என்ற பகுதியொல் சுனில் என்பவருக்கு சொந்தமான காபி தோட்டத்தில் கடந்த 3 நாட்களாக காலில் காயத்துடன் சிறுத்தை ஒன்று நடமாடி கொண்டிருந்தது. குடியிருப்பு பகுதிகளின் அருகே சிறுத்தை சுற்றி வந்ததால் பொதுமக்களிடையே பெரும் அச்சம் நிலவி வந்தது.

கூண்டில் சிக்கிய சிறுத்தைக்கு சிகிச்சையளிக்க வனத்துறை முடிவு
கூண்டில் சிக்கிய சிறுத்தைக்கு சிகிச்சையளிக்க வனத்துறை முடிவு

இது குறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் சிறுத்தையை பிடித்து சிகிச்சை அளிக்க முடிவு செய்தனர். முதுமலை புலிகள் காப்பக கால்நடை மருத்துவர் ராஜேஷ் தலைமையில் வனத்துறையினர் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். இரண்டு இடங்களில் கூண்டு அமைத்தும், இரண்டு இடங்களில் தானியங்கி கேமராக்கள் பொருத்தியும் கால்நடை மருத்துவ குழுவினர் வனத்துறை உதவியுடன் சிறுத்தை தேடி வந்தனர்.

சிகிச்சைக்குப் பின் வனப்பகுதியில் சிறுத்தையை விடுவிக்க வனத்துறை முடிவு
சிகிச்சைக்குப் பின் வனப்பகுதியில் சிறுத்தையை விடுவிக்க வனத்துறை முடிவு

இந்நிலையில் இன்று காலை தேவன் எஸ்டேட்- 2 தேயிலைத் தோட்டத்தில் வைக்கப்பட்ட கூண்டில் சிறுத்தை சிக்கியது. சிறுத்தை சிக்கிய இடத்திற்கு சென்ற முதுமலை புலிகள் கால்நடை மருத்துவர் ராஜேஷ் தலைமையிலான குழுவினர், காயமடைந்த சிறுத்தைக்கு சிகிச்சை அளிக்க திட்டமிட்டுள்ளனர். சிகிச்சைக்குப் பின்னர் சிறுத்தை அடர்ந்த வனப்பகுதியில் விடுவிக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். சிறுத்தை கூண்டில் சிக்கியதை அடுத்து, அப்பகுதி மக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in