நீர்வீழ்ச்சிக்கு சென்றவர் மூக்கில் ஊடுருவிய அட்டைப்பூச்சி... ஒரு மாத போராட்டத்துக்குப் பின்னர் உயிருடன் வெளியேற்றம்

பிரதிநிதித்துவ படம்
பிரதிநிதித்துவ படம்

நீர்வீழ்ச்சியில் குளிக்கச் சென்றவரின் மூக்கினுள் உயிருடன் அட்டைப்பூச்சி தஞ்சமடைந்ததில், ஒரு மாதப் போராட்டத்துக்குப் பின்னர் அது வெளியேற்றப்பட்டது.

வெளியிடங்களுக்குச் செல்வோர் ஆடை மற்றும் உடையில் தொற்றிய சிறு பூச்சிகளுடன் வீடு திரும்புவதுண்டு. ஆனால் நீர்வீழ்ச்சிக்கு நீராட சென்ற உத்தரபிரதேசத்தை சேர்ந்த ஒருவர் மூக்கில் அட்டைப்பூச்சியுடன் திரும்பினார். அட்டைப்பூச்சி மூக்கினுள் குடிபுகுந்ததை அறியாது ஒரு மாதமாக போராடியவர், பின்னர் மருத்துவர் உதவியால் அட்டைப்பூச்சியிடமிருந்து விடுபட்டுள்ளார்.

அட்டை
அட்டை

உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் செசில் ஆண்ட்ரூ என்பவரின் மூக்கில் இருந்து நாசரேத் மருத்துவமனையின் மருத்துவர்கள் அரிய அறுவை சிகிச்சை மூலம் உயிருள்ள அட்டைப்பூச்சியை அகற்றினர். செசில் ஆண்ட்ரூ நாசியில் பல நாட்களாக ரத்தம் கசிந்ததோடு, மூக்கின் உள்ளே விசித்திரமான அசைவுகளையும் உணர ஆரம்பித்தார். சுய மருத்துவம் பயனளிக்காது போகவே, நாசரேத் மருத்துவமனையை அவர் நாடினார்.

மருத்துவர்களின் பரிசோதனையில், அவரது இடது நாசிக்குள் ஆழமாக மறைந்திருந்த உயிருள்ள அட்டைப்பூச்சி அடையாளம் காணப்பட்டது. இந்த அறுவை சிகிச்சையை மருத்துவமனையின் காது மூக்கு தொண்டை பிரிவின் அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர் சுபாஷ் சந்திர வர்மா, டெலஸ்கோப்பிக் முறையைப் பயன்படுத்தி, மூக்கினுள் பிற திசுக்களை சேதப்படுத்தாமல் வெற்றிகரமாக முடித்தார்.

வியட்நாம் போன்ற நாடுகளில் இவ்வாறு மூக்கினுள் அட்டைப்பூச்சி ஊடுருவதும், மருத்துவர்கள் அதனை போராடி வெளியேற்றுவதும் சாதாரணமாக நடக்கக்கூடியது. கீழுள்ள வீடியோ செசில் ஆண்ட்ரூ சிகிச்சை தொடர்பானது அல்ல. அதே போன்ற வேறொரு சம்பவத்தின் பதிவு:

“இரண்டு வாரங்களுக்கு முன்பு உத்தராகண்ட் மாநிலத்தில் நீர்வீழ்ச்சிக்கு நீராட சென்ற செசில் ஆண்ட்ரூ, அதே நீர்வீழ்ச்சியின் தேங்கிய நீரிலும் குளித்திருக்கிறார். குளம் அல்லது ஏரியில் குளிப்பவர்களின் உடலின் வெளிப்புற பகுதிகளில் அட்டைகள் ஒட்டிக்கொள்வது வழக்கமானது. ஆனால் மூக்கினுள் ஒரு அட்டைப்பூச்சி ஊடுருவி இருப்பது ஆச்சரியமானது. மேலும் மூக்கினுள் ஊடுருவிய அட்டைப்பூச்சி அதிர்ஷ்டவசமாக, மூளை அல்லது கண்ணுக்கு செல்லவில்லை" என்றும் மருத்துவர் தெரிவித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in