லாரஸ் விளையாட்டு விருதுகள் முழு பட்டியல்: நோவக் ஜோகோவிச், பொன்மதி சாதனை!

லாரஸ் விளையாட்டு விருதுகள் முழு பட்டியல்: நோவக் ஜோகோவிச், பொன்மதி சாதனை!

24 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியனான நோவக் ஜோகோவிச் 5வது முறையாக லாரஸ் சிறந்த வீரருக்கான விருதை வென்றார். ஸ்பெயினின் ஃபிஃபா உலகக் கோப்பை வென்ற ஐடானா பொன்மதி இந்த ஆண்டின் லாரஸ் விளையாட்டு வீராங்கனை விருதை வென்ற முதல் கால்பந்து வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றார்.

நோவக் ஜோகோவிச் மாட்ரிட்டில் ஆண்டின் லாரஸ் விளையாட்டு வீரர் விருதை வென்றார். நோவக் ஜோகோவிச் 5வது முறையாக சிறந்த விளையாட்டு வீரருக்கான லாரஸ் விருதை வென்றார். ஸ்பெயின் மகளிர் கால்பந்து அணியும் அதன் நட்சத்திர வீராங்கனையான பொன்மதியும் மாட்ரிட்டில் விருதை வென்றார்.

டென்னிஸ் ஜாம்பவான் நோவக் ஜோகோவிச் 2012, 2015, 2016 மற்றும் 2019க்குப் பிறகு 5வது முறையாக லாரஸ் உலக விளையாட்டு வீரருக்கான விருதை வென்றார். அதே நேரத்தில் ஸ்பெயினின் உலகக் கோப்பையை வென்ற கால்பந்து நட்சத்திரம் ஐடானா பொன்மதி முதல் கால்பந்து விளையாட்டு வீராங்கனையாக இந்த விளையாட்டு வீராங்கனை விருதை பெற்றுள்ளார்.

நேற்று ஏப்ரல் 22ம் தேதி மாட்ரிட்டில் நடைபெற்ற விழாவில், ஃபிஃபா உலகக் கோப்பையை வென்ற ஸ்பெயின் அணி, இந்த ஆண்டுக்கான லாரஸ் சிறந்த அணியாக வாக்களிக்கப்பட்டு தேர்வாகியுள்ளது.

இங்கிலாந்தின் நட்சத்திர கால்பந்தாட்ட வீரர் ஜூட் பெல்லிங்ஹாம் ரியல் மாட்ரிட்டில் தனது ஆரம்பகால தாக்கத்திற்காக லாரஸ் பிரேக் த்ரூ ஆஃப் தி இயர் விருதை வென்றார். இதற்கிடையில், புகழ்பெற்ற ஜிம்னாஸ்டிக் வீராங்கனை சிமோன் பைல்ஸ் கடந்த ஆண்டு விளையாட்டுலகில் தனது மறுபிரவேசத்திற்காக அங்கீகரிக்கப்பட்டார்.

7 முறை சூப்பர் பவுல் சாம்பியனான டாம் பிராடி, ஜோகோவிச்சிற்கு அந்த ஆண்டின் சிறந்த விளையாட்டு வீரர் விருதை வழங்கினார். எல்லா காலத்திலும் சிறந்த ஓட்டப்பந்தய வீரரான உசைன் போல்ட், இந்த ஆண்டின் சிறந்த விளையாட்டு வீராங்கனை விருதை பொன்மட்டிற்கு வழங்கினார். மேலும் கடந்த ஆண்டு சிறந்த திருப்புமுனை விருதை வென்ற கார்லோஸ் அல்கராஸ், அந்த வகைக்கான லாரஸ் விருதை பெல்லிங்ஹாமிடம் ஒப்படைத்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in