
மோகன்லால் வீட்டில் யானைத் தந்தம் கைப்பற்றிய வழக்கில், பெரும்பாவூர் நீதிமன்றத்தின் உத்தரவை 6 மாதத்திற்கு நிறுத்தி வைக்க கேரள உயர்நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடிகர் மோகன்லால் வீட்டில் நடைபெற்ற வருமான வரி சோதனையின் போது இரண்டு ஜோடி யானைத் தந்தங்கள் கைப்பற்றப்பட்டன. அனுமதியின்றி யானைத் தந்தங்கள் வைத்திருப்பது குற்றம் என மோகன்லால் மீது வழக்கு பதியப்பட்டது. அதன்பிறகு மாநில அரசு மோகன்லால் மீதான இந்த வழக்கை கைவிடும்படி கேட்டுக் கொண்டதன் பேரில், வழக்கு கைவிடப்பட்டாலும், எர்ணாகுளத்தைச் சேர்ந்த நபர் மீண்டும் வழக்கு தொடர்ந்தார்.
அதன்படி, வரும் நவம்பர் மாதம் இந்த வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று பெரும்பாவூர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில் தற்போது எதிர்பாராத திருப்பமாக கேரள உயர்நீதிமன்றம் இந்த யானைத் தந்த வழக்கு குறித்த விசாரணையை ஆறு மாதத்திற்கு நிறுத்தி வைக்குமாறு உத்தரவிட்டுள்ளது.