காயாமொழி ஊராட்சி மன்றத் தேர்தல் மறுவாக்கு எண்ணிக்கை; தொடரும் ஒரு வாக்கு வித்தியாச வெற்றியால், மீண்டும் குளறுபடி என புகார்

திருச்செந்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முற்றுகை
திருச்செந்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முற்றுகை

தூத்துக்குடி மாவட்டம், காயாமொழி ஊராட்சி மன்ற தலைவர் பதவி தேர்தலுக்கான மறு வாக்கு எண்ணிக்கையிலும் ஒரு வாக்கு வித்தியாசத்தில் ராஜேஸ்வரன் என்பவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட காயாமொழி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கான தேர்தல், கடந்த 2019ம் ஆண்டு நடத்தப்பட்டது. இதில் ராஜேஸ்வரன், முரளி மனோகர் உள்பட மொத்தம் 8 பேர் போட்டியிட்டனர்.

இத்தேர்தலில் 1071 வாக்குகள் பெற்று ராஜேஸ்வரன் என்பவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அவரை எதிர்த்துப் போட்டியிட்டவர்களில் முரளி மனோகர் 1070 வாக்குகள் பெற்றிருந்தார்.

மறு வாக்கு எண்ணிக்கையிலும் வெற்றி பெற்ற ராஜேஸ்வரன் (இடது)
மறு வாக்கு எண்ணிக்கையிலும் வெற்றி பெற்ற ராஜேஸ்வரன் (இடது)

இந்நிலையில் வாக்கு எண்ணிக்கையில் குளறுபடிகள் நடந்ததாக தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் முரளி மனோகர் வழக்குத் தொடுத்தார்.

இந்த வழக்கை விசாரித்த மாவட்ட நீதிமன்றம் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த உத்தரவிட்டிருந்தது. அதன்படி, இன்று மறு வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டது.

இதில் 1069 வாக்குகள் பெற்று ராஜேஸ்வரன் வெற்றி பெற்றதாகவும், முரளிமனோகர் 1068 வாக்குகள் பெற்றுள்ளதாகவும் தேர்தல் நடத்தும் அலுவலர் அறிவித்தார்.

போராட்டம் நடத்தியவர்களிடம் போலீஸார் பேச்சுவார்த்தை
போராட்டம் நடத்தியவர்களிடம் போலீஸார் பேச்சுவார்த்தை

இந்நிலையில் வாக்கு எண்ணிக்கையில் மீண்டும் குளறுபடி நடந்துள்ளதாகவும், செல்லாத வாக்கு ஒன்றை, ராஜேஸ்வரன் கணக்கில் சேர்த்துள்ளதாகவும் கூறி, முரளி மனோகர் தரப்பினர் திருச்செந்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

அப்போது காயாமொழி ஊராட்சிக்கு உட்பட்ட குறிப்பிட்ட வார்டு பகுதியில் மீண்டும் வாக்கு எண்ணிக்கை நடத்தக் கோரி, தேர்தல் நடத்தும் அலுவலரிடம் முறையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் வாசிக்கலாமே...

பயணம் தொடங்கியது... ஜி 7 உச்சி மாநாட்டில் பங்கேற்க இத்தாலி இன்று புறப்படுகிறார் மோடி!

இடைத்தேர்தல் நடைபெறும் விக்கிரவாண்டியில் பரபரப்பு... 23 கிலோ வெள்ளிக் கொலுசுகள் பறிமுதல்!

குவைத் தீ விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 53 ஆக உயர்வு... 41 பேர் இந்தியர்கள்!

அதிர்ச்சி வீடியோ... பெட்ரோல் நிரப்பும் போது செல்போன் பயன்பாடு: தீப்பிடித்ததால் அலறிய வாகன ஓட்டி!

இரண்டாவது திருமணம் குறித்து அறிவிப்பு வெளியிட்ட சீரியல் நடிகை... ரசிகர்கள் வாழ்த்து!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in