தமிழகமும், கர்நாடகமும் சகோதரர்கள்... காவிரி பிரச்சினை பேசி தீர்க்கப்படும் - கர்நாடக அமைச்சர் முனியப்பா உறுதி

கர்நாடக அமைச்சர் முனியப்பா
கர்நாடக அமைச்சர் முனியப்பா
Updated on
1 min read

"தமிழகமும், கர்நாடகமும் சகோதரர்கள் போன்றவர்கள். காவிரி விவகாரத்தில் எந்த பிரச்சினையாக இருந்தாலும் தீர்க்கப்படும்" என கர்நாடக அமைச்சர் முனியப்பா தெரிவித்துள்ளார்.

உலகப்புகழ்பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் கர்நாடக உணவுத்துறை அமைச்சர் கே.எச்.முனியப்பா குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார். முன்னதாக கோவிலுக்கு வருகை தந்த கர்நாடக அமைச்சர் முனியப்பாவுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தொண்டர்கள் அவரை வரவேற்றனர். அப்போது அமைச்சருடன் வந்தவர்கள் செல்போனுடன் சென்றதால் போலீஸாருக்கும், காங்கிரஸ் கட்சியினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து கர்நாடக அமைச்சருடன் அனுமதிக்கப்பட்ட வாகனங்களை கடந்து கூடுதலாக கார்கள் வந்ததால் போலீசார் அவற்றின் பதிவெண்ணை குறித்து வைத்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

மதுரை மீனாட்சி அம்மன் கோயில்
மதுரை மீனாட்சி அம்மன் கோயில்

இதனைதொடர்ந்து சாமி தரிசனம் செய்துவிட்டு அமைச்சர் முனியப்பா, கோயிலை விட்டு வெளியே வந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தமிழகம், புதுவையில் உள்ள 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி வெற்றியடையும். தமிழகத்தில் திமுக தலைவர் ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, கூட்டணி கட்சித்தலைவர்கள் ஆதரவுடன் பெரும் வெற்றி வாய்ப்பு உள்ளது. இந்திய அரசியலில் இளம் தலைவராக ராகுல்காந்தி உள்ளார். மக்கள் ராகுல்காந்தியை தான் விரும்புகிறார்கள். காவிரி விவகாரத்தில் எந்தப் பிரச்சினையும் இல்லை. தமிழகமும், கர்நாடகமும் சகோதர்களாக உள்ளனர். எப்பேற்பட்ட பிரச்சனையாக இருந்தாலும் அது பேசி தீர்க்கப்படும்" என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in