கங்குவா
கங்குவா

ரஜினியுடன் மோதும் சூர்யா - ‘கங்குவா’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சூர்யா நடிப்பில் உருவாகி வரும் ‘கங்குவா’ திரைப்படம் வரும் அக்டோபர் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. ரஜினியின் ‘வேட்டையன்’ படமும் அதே நாளில் வெளியாகிறது.

சிறுத்தை சிவா, நடிகர் சூர்யா இருவரும் முதல் முறையாக இணையும் படம் கங்குவா. இப்படம், சூர்யா, திஷா பதானி, பாபி தியோல் உள்ளிட்டோர் நடிப்பில் மிகுந்த பொருட்செலவில் வரலாற்று பின்னணியிலான கதைக்களத்துடன் உருவாகி வருகிறது. நிகழ்காலம் மற்றும் கடந்த காலத்திற்கான டாக்கிங் போர்ஷனின் படப்பிடிப்பு, கடந்த ஓராண்டுக்கு மேலாக நடந்து வந்தது. யுவி கிரியேஷன்ஸ் மற்றும் ஸ்டூடியோ கிரீன் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தை சிறுத்தை சிவா இயக்கி வருகிறார். வெற்றி பழனிச்சாமி ஒளிப்பதிவு செய்துள்ளார்.தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.

கங்குவா
கங்குவாBG

சமீபத்தில் படப்பிடிப்பு முடிந்து தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகின்றன. ‘பாகுபலி’ போன்று பிரம்மாண்டமான படைப்பாக ரசிகர்களுக்கு கொடுக்க வேண்டும் என்று படக்குழு தீவிரமாக செயல்பட்டு வருகின்றது. இப்படத்தை 10 சர்வதேச மொழிகளில் வெளியிடவும் படக்குழு திட்டமிட்டு அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகின்றது.

இந்நிலையில், இப்படம் வரும் அக்டோபர் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என இன்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரஜினியின் ‘வேட்டையன்’ படமும் அதே நாளில் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது

x
காமதேனு
kamadenu.hindutamil.in