அடேங்கப்பா... ’கல்கி 2898 ஏடி’ படத்தின் ரன் டைம் இவ்வளவு நேரமா?

‘கல்கி 2898 ஏடி’
‘கல்கி 2898 ஏடி’
Updated on
1 min read

’கல்கி 2898 ஏடி’ படத்தின் ரன் டைம் குறித்தானத் தகவல் தெரியவந்துள்ளது.

நாக் அஸ்வின் இயக்கத்தில் நடிகர்கள் பிரபாஸ், அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் ‘கல்கி 2898 ஏடி’ படம் இன்னும் சில தினங்களில் வெளியாக இருக்கிறது. இதன் ப்ரீ ரிலீஸ் ஈவண்ட் நேற்று மும்பையில் நடைபெற்றது.

'கல்கி 2898 ஏடி’
'கல்கி 2898 ஏடி’

இதில் படத்தில் உள்ளது போலவே, நிஜத்திலும் நடிகை தீபிகா படுகோனே பேபி பம்ப் வெளியே தெரியும்படி கலந்து கொண்டிருந்தார். இந்த புகைப்படங்களும் இணையத்தில் வைரலானது. புராணக்கதைகளை அடிப்படையாகக் கொண்டும் எதிர்காலத்தை இணைக்கும் வகையிலும் ‘கல்கி 2898 ஏடி’ திரைப்படம் உருவாகி இருப்பதாக நாக் அஸ்வின் கூறியுள்ளார்.

இப்போது, படத்தின் ரன் டைம் பற்றிய தகவல் தெரிய வந்துள்ளது. அதாவது, 3 மணி நேரம் 56 வினாடிகள் என சொல்லப்பட்டுள்ளது. இதோடு, ‘சினிமாவுக்குண்டான சுதந்திரத்தோடு இதிகாசக்கதைகள் எடுக்கப்பட்டுள்ளது. எந்த மதத்தையும் புண்படுத்தும் நோக்கமில்லை’ என்பதையும் குறிப்பிடச் சொல்லி படக்குழுவுக்கு சென்சார் போர்டு அறிவுரை கொடுத்துள்ளது.

இந்தப் படத்தில் நடிகர் பிரபாஸ் பைரவா என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருடன் படம் முழுக்க புஜ்ஜி என்ற காரும் உடன் வருகிறது. பிரபாஸின் பலமாக நடிகர் அமிதாப் பைரவா என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in