திருமணத்திற்கு சென்று திரும்பிய கார் பயங்கர விபத்து… சம்பவ இடத்திலேயே 5 பேர் பலி!

திருமணத்திற்கு சென்று திரும்பிய கார் பயங்கர விபத்து… சம்பவ இடத்திலேயே 5 பேர் பலி!

ஜார்க்கண்ட் மாநிலத்தில் திருமணத்திற்கு சென்றுவிட்டு திரும்பிய கார் மரத்தில் மோதிய விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

திருமண நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு ஒரே காரில் பத்து பேர் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். கார், கிரித் மாவட்டம் பக்மாரா பகுதியில் இன்று அதிகாலை வந்து கொண்டிருந்தபோது, சாலையோரம் இருந்த மரத்தில் மோதி விபத்திற்குள்ளானது. தகவல் அறிந்து போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

காரில் இருந்த 10 பேரில், 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 2 குழந்தைகள் உள்பட 5 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

விபத்து குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், காரில் பயணம் செய்தவர்கள் தோரியா என்ற கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது.

விபத்து
விபத்து

அவர்கள், சுமார் 40 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள திகோடி என்ற பகுதியில் நடந்த திருமண நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு தங்கள் கிராமத்திற்கு திரும்பியபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

மேலும் ஓட்டுநரின் கவனக்குறைவால் ஓட்டுநர் விபத்து நிகழ்ந்திருக்கலாம் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கார் விபத்தில் உறவினர்கள் 5 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in