தை அமாவாசை... கடைசி வெள்ளிக்கிழமை... எகிறியது பூக்களின் விலை... மல்லி கிலோ ரூ.3,000க்கு விற்பனை!

மல்லிகைப்பூ விற்பனை
மல்லிகைப்பூ விற்பனை

இன்று தை அமாவாசை மற்றும் தை மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமை என்பதாலும், நாளை பிப்ரவரி 10 மற்றும் 11ம் தேதி வளர்பிறை சுப முகூர்த்த தினங்கள் என்று தொடர்ந்து அடுத்தடுத்து விசேஷ தினங்கள் என்பதால் தமிழகத்தின் பல பகுதிகளிலும் பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. மதுரையில் இன்று காலை மல்லிகைப்பூ கிலோ ரூ.3000க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

மல்லிகைப் பூ
மல்லிகைப் பூ

பொதுவாக பண்டிகைக் காலங்களில் பூக்களின் விலை உயர்வது வழக்கமான ஒன்றாக மாறியிருக்கிறது. பொங்கல் பண்டிகை காலங்களில் கிலோ மல்லிகைப்பூ ரூ.3,000 வரை விற்பனையான நிலையில், இன்று இந்த மாதத்தில் இரண்டாவது முறையாக அமாவாசையை முன்னிட்டு மல்லிகைப்பூ விலை மீண்டும் ரூ.3,000யைத் தொட்டுள்ளது.

இன்றைய காலை நேர விலை நிலவரப்படி மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் மல்லிகைப்பூ ஒரு கிலோ 3,000 ரூபாய்க்கும், பிச்சிப்பூ மற்றும் முல்லை ஆகிய பூக்கள் கிலோ 2000 ரூபாய்க்கும், மெட்ராஸ் மல்லி - 1ஆயிரம், சம்மங்கி , செவ்வந்தி -350, பட்டன் ரோஸ் - 350க்கு விற்பனை செய்யப்படுகிறது.

நேற்று மல்லிகைப்பூ கிலோ இரண்டாயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று கிலோ 3 ஆயிரம் ரூபாய் என ஒரே நாளில் விலை உயர்ந்துள்ளது பொதுமக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

இதேபோல், மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மலர் சந்தையிலும் மல்லிகை 3 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in