டப்பிங் வீடியோவுக்கே இப்படி வரவேற்பா.... ரசிகர்களை கவர்ந்த ஜப்பான் திரைப்படம்!

டப்பிங் வீடியோவுக்கே இப்படி வரவேற்பா.... ரசிகர்களை கவர்ந்த ஜப்பான் திரைப்படம்!

ஜப்பான் படத்தின் டப்பிங் வீடியோ 60 லட்சம பார்வையாளர்களை கடந்து வரவேற்பு பெற்று வருகிறது.

நடிகர் கார்த்தி-இயக்குனர் ராஜு முருகன் கூட்டணியில் 'ஜப்பான்' திரைப்படம் உருவாகி வருகிறது. தேசிய விருது பெற்ற 'ஜோக்கர்' படத்திற்குப் பிறகு மீண்டும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் உடன் ராஜு முருகன் கைகோர்த்துள்ளார். இந்த திரைப்படம் தமிழ் தெலுங்கு மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் வெளியாக இருக்கிறது.

ஜப்பான் திரைப்படம்
ஜப்பான் திரைப்படம்

'ஜப்பான்' திரைப்படம் நடிகர் கார்த்தியின் 25வது படம் என்பதால் மிக அதிக பொருட்செலவில் படம் தயாராகி வருகிறது. அனு இம்மானுவேல் கதாநாயகியாக நடிக்க, தெலுங்கு நடிகர் சுனில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைக்கிறார். ஜப்பான் திரைப்படம் தீபாவளிக்கு வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

'ஜப்பான்' படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கியுள்ளதாக படக்குழு சமீபத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தது. இந்நிலையில், இந்த வீடியோ 6 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது தயாரிப்பு நிறுவனத்தை மகிழ்ச்சியடைய செய்துள்ளது. இது ‘ஜப்பான்’ படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பைக் காட்டுவதாக அமைந்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in