ஐடி பார்க்கை முழ்கடித்த பெருமழை... வீடுகளில் புகுந்த வெள்ளம் - கேரள மக்கள் அவதி!

ஐடி பார்க்கை முழ்கடித்த பெருமழை... வீடுகளில் புகுந்த வெள்ளம் - கேரள மக்கள் அவதி!

கேரளாவில் நேற்று பெய்த கனமழையின் விளைவாக கேரளாவின் பல மாவட்டங்களில் வீடுகளில் வெள்ளம் புகுந்துள்ள நிலையில்  ஐடி பார்க்கான டெக்னோ பார்க்கும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை  திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா மற்றும் ஆலப்புழா ஆகிய நான்கு இடங்களில் ஆரஞ்சு அலர்ட் மற்றும் மாநிலத்தின் எட்டு மாவட்டங்களில் மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டிருந்தது. வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தபடியே, கேரளாவில் ஞாயிற்றுக்கிழமை பல பகுதிகளில் கனமழை பெய்ததால்,  கேரளாவின் தென் மாவட்டமான திருவனந்தபுரத்தின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியது. 

அம்மாநிலத்தின் முதல் மற்றும் பெரிய தகவல் தொழில்நுட்ப பார்க்கான டெக்னோ பார்க் மழைநீரில் மிதந்துக்கொண்டு இருக்கிறது. மழை வெள்ளத்தால் மூழ்கியிருந்த விடுதியில் இருந்து பல பெண் மாணவிகள் பாதுகாப்பான பகுதிகளுக்கு படகுகளில் மீட்கப்பட்டதாக கேரள தொலைக்காட்சி தெரிவித்துள்ளது. 

இன்று மழை பொழிவு கணிசமாக குறைந்ததாலும்  பெரும்பாலான பகுதிகளில் வெள்ளம் மற்றும் வெள்ளம் சூழ்ந்துள்ள காரணத்தால் மக்கள் வீடுகளில் முடங்கும் சூழ்நிலையே உள்ளது. மேலும் திருவனந்தபுரம் புறநகர் பகுதியான கஜகூடத்தில் உள்ள டெக்னோபார்க் காலனியில், வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால், மக்கள் வெளியேற்றப்பட்டனர். திருவனந்தபுரத்தில் குறிப்பிட்ட சில பகுதிகளில் தண்ணீர் வடியாததால், ரயில்களின் நேரம் மாற்றம் மற்றும் தாமதம் ஏற்பட்டது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in