
ஹமாஸ் – இஸ்ரேல் இடையே மோதல் தொடர்ந்து வரும் நிலையில், இஸ்ரேலில் இளம்பெண் ஒருவர் சடலங்களுக்கு அடியில் 7 மணி நேரம் மறைந்திருந்து உயிர் பிழைத்துள்ளார்.
காசாவை ஒட்டிய கிபுட்ஜ் ரீம் என்ற பகுதியில் நேச்சர் பார்ட்டி என்ற பெயரில், கடந்த சனிக்கிழமை இசை திருவிழா ஒன்று நடைபெற்றது. போர் பற்றி அறியாததால் மக்கள் மகிழ்ச்சியுடன் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
அப்போது தான் திடீரென ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியது. அதில் இசை திருவிழாவில் பங்கேற்றவர்களில் 250-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்நிலையில், இந்த தாக்குதலின் போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹமாஸ் படையின் தாக்குதலில் இருந்து இளம்பெண் ஒருவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார். அதாவது, உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு அடியில் 7 மணிநேரம் மறைந்திருந்து அவர் உயிர் பிழைத்துள்ளார். லீ சசி என்ற அந்த பெண் உட்பட 35 பேர் ஒரு இடத்தில் பதுங்கி இருந்தனர்.
அப்போது ஹமாஸ் படையினர் அவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதில் ஒருவர் மேல் ஒருவர் விழுந்து உயிரிழந்தனர். ஆனால் 35 பேரில் 10 பேர் மீது துப்பாக்கி குண்டு படவில்லை. எனவே, லீ சசி உள்ளிட்ட 10 பேர் உயிர் பிழைத்தனர். அவர்கள் வெளியே வராமல் சடலங்களுக்கு அடியில் 7 மணி நேரம் மறைந்திருந்தனர்.
இதனை லீ சசி என்ற தனது தோழியிடம் கூறியுள்ளார். இதுதொடர்பான வீடியோவையும் அவர் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவை பார்த்த மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.