வி.கே.பாண்டியன் என்னை கட்டுப்படுத்துகிறாரா? - பாஜகவுக்கு நவீன் பட்நாயக் பதிலடி!

வி.கே.பாண்டியன் என்னை கட்டுப்படுத்துகிறாரா? - பாஜகவுக்கு நவீன் பட்நாயக் பதிலடி!
Updated on
1 min read

ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் வி.கே.பாண்டியனால் கட்டுப்படுத்தப்படுவதாக அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக நவீன் பட்நாயக் பேசியுள்ளார்.

இன்று சமூக ஊடகங்களில் வைரலான ஒரு வீடியோவில், மேடையில் உரையாற்றும் போது ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கின் கைகள் நடுங்கிக் கொண்டிருக்கும் காட்சிகளும், அவரின் கையை பிடித்து வி.கே.பாண்டியன் கட்டுப்படுத்தும் காட்சியும் இடம் பெற்றிருந்தன.

ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் உடன் வி.கே.பாண்டியன்
ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் உடன் வி.கே.பாண்டியன்

இந்த வீடியோவை எக்ஸ் தளத்தில் பகிர்ந்த ஹிமந்த பிஸ்வா சர்மா, “இது மிகவும் வேதனையளிக்கும் காணொளி. நவீன் பாபுவின் கை அசைவுகளைக் கூட விகே பாண்டியன் கட்டுப்படுத்துகிறார். தமிழ்நாட்டைச் சேர்ந்த ஓய்வுபெற்ற முன்னாள் அதிகாரி ஒருவர் ஒடிசாவின் எதிர்காலம் குறித்து தற்போது கடைப்பிடிக்கும் கட்டுப்பாட்டை நினைத்துப் பார்க்கவே நடுங்குகிறது!" என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு பதிலடி கொடுத்து செய்தி நிறுவனம் ஒன்றிடம் பேசியுள்ள நவீன் பட்நாயக், “பிரச்சினைகள் அல்லாதவற்றை பிரச்சினைகளாக மாற்றும் பாஜக என் கைகளால் விவாதிக்கிறது என்று நான் நம்புகிறேன். இது நிச்சயமாக வேலை செய்யாது" என்று கூறியுள்ளார்.

இதற்கிடையில், வி.கே.பாண்டியனும் பாஜகவை கடுமையாக சாடியுள்ளார். அவர், “ பிஜேடி கட்சியின் இலக்குகள் எங்கள் வெற்றிக்கு உதவும். தொடர்ந்து ஆறாவது முறையாக பிராந்திய கட்சி ஆட்சி அமைப்பதை யாராலும் தடுக்க முடியாது” என்று அவர் கூறினார்.

ஒடிசா மாநிலத்தின் சட்டசபை மற்றும் மக்களவைத் தேர்தல்கள் மே 13 முதல் ஜூன் 1 வரை நான்கு கட்டங்களாக நடைபெறுகின்றன. வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

எடியூரப்பா மீது போக்சோ புகார் அளித்த பெண் திடீர் மரணம்... கர்நாடகாவில் பரபரப்பு!

திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை... கட்டுக் கட்டாக பணம் பறிமுதல்!

டெல்லியில் இண்டிகோ விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: பயணிகள் அவசர அவசரமாக வெளியேற்றம்

தாய்லாந்தில் திருமணம்... சென்னையில் ரிசப்ஷன்... நடிகை வரலட்சுமியின் அடடே பிளான்!

மே 30-ம் தேதி கன்னியாகுமரி வருகிறார் பிரதமர் மோடி... பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in