இன்று குரூப் 2 நேர்முகத் தேர்வுகள் தொடக்கம்!

அரசு பணியாளர் தேர்வாணையம்
அரசு பணியாளர் தேர்வாணையம்

குரூப் 2 பதவிக்கான எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான நேர்முகத் தேர்வுகள் இன்று முதல் தொடங்குகிறது. 

தேர்வு எழுதியவர்கள்
தேர்வு எழுதியவர்கள்

அரசுத் துறைகளில் இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், சார் பதிவாளர் உட்பட குரூப் 2, 2ஏ பதவிகளில் உள்ள 6,151 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த 2022-ல் டிஎன்பிஎஸ்சி வெளியிட்டது.

இதற்கான முதல்நிலை, முதன்மைத் தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டு முடிவுகளும் வெளியிடப்பட்டு விட்டன. அதைத் தொடர்ந்து  குரூப் 2 பதவிகளில் 161 பணியிடங்களுக்கு தகுதியானவர்களை தேர்வு செய்யும் பணிகள் கடந்த மாதம் தொடங்கின.

சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்து நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்ட 327 பட்டதாரிகளின் பட்டியலை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டது.   விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண் மற்றும் பிற விதிமுறைகளின் அடிப்படையில்  327 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கான நேர்முக தேர்வு சென்னை பிராட்வேயில் உள்ள டிஎன்பிஎஸ்சி தலைமை அலுவலகத்தில் இன்று காலை நடைபெறுகிறது. 

இதில் பங்கேற்க வருபவர்கள் அனைத்து அசல் சான்றிதழ்களையும் எடுத்து வர வேண்டும், ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை சமர்ப்பிக்க தவறினாலும் அடுத்தகட்ட தேர்வுக்கு அனுமதி வழங்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நேர்முக தேர்வு தொடர்ந்து 17ம் தேதி வரை நடைபெறுகிறது. அதன் பிறகு வருகிற 21ம் தேதி இவர்களுக்கான கலந்தாய்வு நடக்கிறது. கலந்தாய்வு மூலம் காலியாக உள்ள பணியிடங்களில் இவர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in