ரூ.1000 கோடி பரிவர்த்தனையைக் கடந்து யுபிஐ சாதனை! இந்திய அரசு பெருமிதம்!

 யுபிஐ பண பரிவர்த்தனை சேவை
யுபிஐ பண பரிவர்த்தனை சேவை

இந்தியாவின் யுபிஐ பணப் பரிவர்த்தனை சேவை ரூ.1000 கோடி பரிவர்த்தனைகளைக் கடந்து, இதுவரை இல்லாத அளவு புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

இந்தியாவில் எளிமையாக பணப்பரிவர்த்தனை மேற்கொள்ள கொண்டு வரப்பட்ட யுபிஐ சேவை உலகையே திரும்பி பார்க்குமளவுக்கு வளர்ச்சியை பெற்றுள்ளது. ஒவ்வொரு மாதமும் இதன் வளர்ச்சி பலரையும் வியப்பில் ஆழ்த்தி வருகிறது. இந்நிலையில், ஆன்லைன் பணப்பரிவர்த்தனை தளமான யுபிஐ, கடந்த ஆகஸ்டு 23ம் தேதி வரை ஆயிரம் கோடி பரிவர்த்தனைகளை கடந்துள்ளது. ஆகஸ்டு மாதத்தில் மட்டும் யுபிஐ பரிவர்த்தனைகளின் மொத்த எண்ணிக்கை 1,500 கோடி ஆக உயர்ந்தது. இது கடந்த ஜூலை மாதத்தை காட்டிலும் 67 சதவீதம் அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்
மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்

இதுகுறித்து, ட்விட்டரில் பதிவிட்டுள்ள மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இந்த புதிய சாதனை, ஜூலை மாதத்தில் எட்டப்பட்ட ரூ.15.34 லட்சம் கோடி என்ற முந்தைய சாதனையை முறியடித்துள்ளது என்று பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் ரிசர்வ் வங்கி யுபிஐ அமைப்பில் சில மாற்றங்களைச் அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி கடன் கணக்குகளையும் யுபிஐ உடன் இணைக்க அனுமதித்துள்ளது. இதன் மூலம் யுபிஐ மூலமாகவே மக்கள் இனி கடன்களையும் திரும்ப செலுத்த முடியும். ரிசர்வ் வங்கியின் இந்த முடிவை பலரும் வரவேற்றுள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in