ரூ.30,000 முதலீடு... ரூ.2,100 கோடிக்கு மேல் உயர்ந்த கதை! சுயதொழிலில் சாதித்த இளைஞர்கள்!

ரூ.30,000 முதலீடு... ரூ.2,100 கோடிக்கு மேல் உயர்ந்த கதை! சுயதொழிலில் சாதித்த இளைஞர்கள்!

கொல்கத்தாவை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் மொமோஸ் விற்றே 2 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் சொத்து சேர்த்துள்ளார்.

மொமோஸ் தற்போது பரவலாக மக்களிடையே விருப்பமான உணவாக இடம் பிடித்துள்ளது. அதில் வாவ் மொமோஸுக்கு என தனி ரசிகர்கள் உள்ளனர். அந்த நிறுவனத்தை உருவாக்கியவர்கள், சாகர் தர்யாணி மற்றும் பினோத் குமார்.

கொல்கத்தாவைச் சேர்ந்த நண்பர்களான இருவரும் இணைந்து உருவாக்கிய நிறுவனம் தான் வாவ் மொமோஸ். கொல்கத்தாவின் செயின்ட் சேவியர் கல்லூரியில் பட்டம் பெற்ற சாகர் தர்யாணியை மேற்படிப்பு படிக்க அவரது பெற்றோர் கட்டாயப்படுத்தியுள்ளனர். அதே போல் மொமோஸ் ஐடியாவுக்கும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஆனாலும் பெற்றோரை சமாளித்து 2008-ம் ஆண்டு நண்பர்கள் இருவரும் சேமிப்பு தொகையான 30,000 ரூபாயில் சிறிய மொமோஸ் கடையை தொடங்கினர். அப்போது ஒரு டேபிள், இரண்டு பகுதி நேர சமையல்காரர்கள் மட்டுமே இருந்தனர்.

முதல் இரண்டு ஆண்டுகள் கடுமையான போராட்டத்தை சந்தித்தனர். அதற்கு இடையே மொமோஸில் பல வகைகளை முயற்சி செய்தனர். அதன் மூலம் வரவேற்பை பெற்று கொல்கத்தா நகரில் பல கடைகளை திறந்தனர்.

தொடர்ந்து நபர்களுக்கு உரிமை வழங்கி தங்கள் நிறுவனம் சார்பில் கடை தொடங்கவும் ஊக்குவித்தனர். தற்போது இந்தியா முழுக்க வாவ் மொமோஸ் பெயரில் 800 கடைகள் செயல்பட்டு வருகிறது.

30 ஆயிரம் ரூபாயில் வியாபாரத்தை தொடங்கிய வாவ் மொமோஸின் இன்றைய சொத்து மதிப்பு 2,100 கோடி ரூபாய். நாள் ஒன்றுக்கு 6 லட்சம் மொமோஸ் விற்பனை செய்யப்படுகிறது. தன்னம்பிக்கையும், ஆர்வமும் இருந்தால் வெற்றி நிச்சயம் என்பதற்கு இவர்களே சாட்சி.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in