மாஸாக நடந்து முடிந்த 'இந்தியன் 2' இசை வெளியீட்டு விழா...நிகழ்வின் ஹைலைட்ஸ்!

கமல்ஹாசன்
கமல்ஹாசன்

கமல்ஹாசன் - ஷங்கர் கூட்டணியில் ஜூலை மாதம் வெளியாக இருக்கும் ‘இந்தியன்2’ படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை நேரு ஸ்டேடியத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. நிகழ்ச்சியின் ஹைலைட்டான தருணங்கள் குறித்து இங்கு பார்க்கலாம்.

இந்த நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர்கள் லோகேஷ் கனகராஜ், நெல்சன், நடிகர் சிலம்பரசன் ஆகியோர் கலந்து கொண்டனர். கறுப்பு நிற சட்டை, பேண்ட் அணிந்து தொப்பியோடு கமல்ஹாசன் மாஸாக எண்ட்ரி கொடுத்தார்.

ரெட் கார்பெட்டில் இயக்குநர் ஷங்கர் பேசியபோது, “இன்னைக்கு இருக்கற சூழ்நிலையில, ‘இந்தியன்’ தாத்தா வந்தா என்ன நடக்கும் அப்படிங்கறதுதான் ‘இந்தியன்2’. கமல்ஹாசன் தாத்தா கதாபாத்திரத்தை அருமையாக செய்திருக்கிறார்.

28 வருடங்களுக்கு முன்னால், அவரைப் பார்த்தபோது எந்தளவுக்கு கூஸ்பம்ப்ஸாக இருந்ததோ, அதேபோல தான் ‘இந்தியன்2’ படத்தில் மீண்டும் அவரை தாத்தா கெட்டப்பில் பார்த்தபோது இருந்தது” என்று சொன்னார்.

படத்திற்கு இசை அனிருத். இவர் மேடையில் படத்தின் ஆறு பாடல்களையும் பாடி நடனம் ஆடி அசத்தினார். “ஆறு பக்கம் ஏழு. ரஹ்மானுக்கு அப்புறம் யாரும் இல்லை” என்று சொல்லி, ‘இந்தியன்’ படத்தின் இசையமைப்பாளரான ரஹ்மான் பற்றியும் பெருமையாகப் பேசினார்.

கமல்ஹாசன் மேடையில் பேசியதாவது, “படத்தின் இரண்டாம் பாகம் எனக்கு ரொம்பப் பிடிக்கும். ஏனெனில், மக்களுக்கு படத்தில் என்ன எதிர்பார்க்க வேண்டும் என்பது தெரியும். 'இந்தியன் 2’ தொடங்கும்போது நிறைய சோதனைகள் இருந்தது. அதையெல்லாம் கடந்து இந்தப் படம் வெளியாக இருப்பது மகிழ்ச்சி. நான் தமிழன், இந்தியன் என்ற பெருமை எனக்கு உண்டு. நம்மை யாராலும் பிரிக்க முடியாது. இந்தப் படத்தில் நடித்த சில கலைஞர்கள் நம்முடன் இன்று இல்லை என்று சொல்லும்போது மனம் ஏற்றுக் கொள்ள மறுக்கிறது” என்றார்.

மேலும், “சினிமாவில் பல நாட்கள் வேஷமே கிடைக்காமல் சாப்பிடாமல் இருந்திருக்கிறேன். அந்தத் தருணங்கள் எல்லாம் மனதில் இருக்கிறது. அதனால், இந்தியன் தாத்தா கெட்டப் போடும்போது சாப்பிடாமல், தண்ணீர் குடிக்க முடியாமல் இருந்தது என்றெல்லாம் வருத்தம் இல்லை. அனிருத் பாடல்கள் இந்தப் படத்திற்கு சிறப்பாக வந்துள்ளது. ஷங்கர் ‘இந்தியன்’ பட சமயத்தில் இந்தக் கதை மீது எவ்வளவு தீவிரமாக இருந்தாரோ அதேபோலதான் ‘இந்தியன்2’ கதையையும் சின்சியராக செய்து முடித்துள்ளார். படத்தின் மூன்றாவது பாகமும் வெளியாகும்” என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in