டி20 உலகக்கோப்பை கிரிக்கெட்... அயர்லாந்திற்கு எதிரான போட்டியில் இந்தியா அபார வெற்றி!

ரோகித் சர்மா
ரோகித் சர்மா

உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் தொடரின் லீக் சுற்று போட்டியில் இந்திய அணி அயர்லாந்து அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றுள்ளது.

அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகள் நாடுகளில் நடைபெற்று வரும் டி20 கிரிக்கெட் போட்டி தொடரின் லீக் சுற்று ஆட்டங்கள் தற்போது நடைபெற்று வருகின்றன. ‘ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி தனது முதல் போட்டியில் அயர்லாந்து அணியை எதிர்கொண்டது. நியூயார்க்கின் நசாவ் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

இந்திய அணி வீரர்கள்
இந்திய அணி வீரர்கள்

இதையடுத்து களமிறங்கிய அயர்லாந்து அணியில், அதிகபட்சமாக காரத் டெலனி 26 ரன்கள் எடுத்தார். பிற வீர்கள் இந்திய பந்துவீச்சை சமாளித்து ரன் எடுக்க தவறியதால் 16 ஓவர்கள் முடிவில் அந்த அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 96 ரன்கள் மட்டும் எடுத்திருந்தது. இந்தியா தரப்பில் ஹர்திக் பாண்டியா 3 விக்கெட்டுகளையும், பும்ரா, அர்ஷ்தீப் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்களையும் வீழ்த்தி இருந்தனர். 97 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியில் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி ஒரு ரன்னில் ஆட்டம் இழந்து அதிர்ச்சி அளித்தார்.

இந்திய அணி வீரர்கள்
இந்திய அணி வீரர்கள்

ஆனால், மறுமுனையில் நிலைத்து நின்று ஆடிய கேப்டன் ரோகித் சர்மா, 52 ரன்கள் எடுத்தார். ரிஷப் பண்ட் 36 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதனால் இந்திய அணி 12.2 ஓவர் முடிவில் இரண்டு விக்கெட்டுகளை இழந்து 97 ரன்களை எடுத்தது. இதன் மூலம் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. அயர்லாந்து தரப்பில் மார்க் அடேய்ர், பெஞ்சமின் வைட் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணிக்காக அதிக போட்டிகளில் வெற்றி பெற்ற அணியின் கேப்டன் என்ற எம்.எஸ்.தோனியின் சாதனையை, ரோகித் சர்மா முறியடித்தார். எம்.எஸ்.தோனி 41 போட்டிகளில் வென்றிருந்த நிலையில், ரோகித் சர்மா தற்போது 42 போட்டிகளில் வெற்றி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in