டி20 கிரிக்கெட்... பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி த்ரில் வெற்றி!

இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி
இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் சுற்று ஆட்டத்தில் இந்திய அணி பாகிஸ்தானுக்கு எதிராக 6 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றியை பதிவு செய்தது.

அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகள் நாடுகளில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் ’ஏ’ பிரிவு லீக் சுற்று ஆட்டத்தில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் நேற்று பலப்பரீட்சை நடத்தின. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணியில் அதிகபட்சமாக ரிஷப் பண்ட் 42 ரன்கள் குவித்தார்.

இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி
இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி

இந்திய அணி 19 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 119 ரன்கள் மட்டும் எடுத்தது. பாகிஸ்தான் தரப்பில் சிறப்பாக பதிவு செய்ய ஹாரிஸ் ராவுஃப் மற்றும் நசீம் ஷா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தனர். 120 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி களம் இறங்கியது. அந்த அணியில் துவக்க ஆட்டக்காரர் முகமது ரிஸ்வான் 31 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார். கேப்டன் பாபர் அசாம் 13 ரன்களும், இமாத் வசீம் 15 ரன்களும் எடுத்தனர்.

இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி
இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி

20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 7 விக்கெட்டுகளை இழந்து 113 ரன்கள் மட்டும் எடுத்தது. இதன் மூலம் 6 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி த்ரில் வெற்றி பெற்றது. இந்தியா தரப்பில் சிறப்பாக பந்துவீசிய பும்ரா 3 விக்கெட்டுக்களையும், ஹர்திக் பாண்டியா 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 4 புள்ளிகளுடன் குழு அளவிலான புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in