இந்தியாவின் வெற்றிநடை தொடருமா? இன்று நடப்பு சாம்பியனுடன் மோதல்!

இந்தியாவின் வெற்றிநடை தொடருமா? இன்று நடப்பு சாம்பியனுடன் மோதல்!

உலகக்கோப்பை தொடரில் இதுவரை ஒரு தோல்வியை கூட சந்திக்காத இந்திய அணி இன்று நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணியை எதிர்கொள்கிறது.

இதுவரை 5 போட்டிகளில் விளையாடியுள்ள இந்தியா அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 2-ம் இடத்தில் உள்ளது. முதலிடத்தில் தென்னாப்பிரிக்கா அணி உள்ளது.

இங்கிலாந்து விளையாடிய 5 போட்டிகளில் ஒன்றில் மட்டும் வெற்றி பெற்று கடைசி இடத்தில் உள்ளது. இந்நிலையில் இன்றைய போட்டி நடைபெற உள்ளது. இனியாவது வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் இங்கிலாந்து களம் காணும் என்பதால் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

இந்திய அணியில் ரோகித் சர்மா, விராட் கோலி, ராகுல், சுப்மன் கில், பும்ரா, சிராஜ், ஷமி ஆகியோர் நல்ல ஃபார்மில் உள்ளனர். காயம் காரணமாக ஹர்திக் பாண்டியா இந்த போட்டியிலும் விளையாட மாட்டார்  என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.

நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணி 5 ஆட்டங்களில் வங்காளதேசத்துக்கு எதிராக மட்டும் வெற்றி பெற்றது. நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், தென்னாப்பிரிக்கா, இலங்கை அணிகளிடம் தோல்வி அடைந்து கிட்டதட்ட அரையிறுதி வாய்ப்பை இழந்து விட்டது.

எஞ்சிய ஆட்டங்கள் அனைத்திலும் வெற்றி பெற்றாலும், மற்ற அணிகளின் முடிவுக்கு ஏற்ப குறைந்த வாய்ப்பே உள்ளது. ஒருநாள் போட்டியில் இவ்விரு அணிகளும் இதுவரை 106 முறை நேருக்கு நேர் மோதி உள்ளன.

இதில் 57-ல் இந்தியாவும், 44-ல் இங்கிலாந்தும் வெற்றி பெற்றுள்ளன. 2 ஆட்டம் டையில் முடிந்தது. 3 ஆட்டங்களுக்கு முடிவு இல்லை. உலகக் கோப்பையில் மோதிய 8 ஆட்டங்களில் 4-ல் இங்கிலாந்தும், 3-ல் இந்தியாவும் வெற்றி கண்டுள்ளன. ஒரு ஆட்டம் டையில் முடிந்தது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in