பதறும் பாகிஸ்தான்... உலகின் நம்பர் 1 ஆனது இந்தியா... ஆஸ்திரேலியாவை வீழ்த்தி அசத்தல் வெற்றி!

பதறும் பாகிஸ்தான்... உலகின் நம்பர் 1 ஆனது இந்தியா... ஆஸ்திரேலியாவை வீழ்த்தி அசத்தல் வெற்றி!
Updated on
1 min read

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இந்நிலையில் முதல் ஒருநாள் போட்டி நேற்று மொகாலியில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி 50 ஓவர் முடிவில் 276 ரன்கள் எடுத்தது.

மார்ஷ் ஒரு ரன்னில் ஆட்டமிழக்க, டேவிட் வார்னர்- ஸ்மித் ஆகிய இருவரும் சீராக ரன் சேர்த்தனர். வார்னர் 52 ரன்னில் ஆட்டமிழந்தார். ஸ்மித், லபுசேன், கிரீன், ஸ்டாய்னிஸ் என யாரும் பெரிய ஸ்கோர் எடுக்கவில்லை.

277 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது. தொடக்க வீரர்களான ருதுராஜ் – சுப்மன் கில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 142 ரன்கள் சேர்த்தது.

இந்நிலையில் ருதுராஜ் 71 ரன்கள் எடுத்து அவுட்டானார். அவரை தொடர்ந்து வந்த ஸ்ரேயஸ் அய்யர் வந்த வேகத்தில் ரன் அவுட் ஆகி வெளியேறினார். சிறிது நேரத்தில் சுப்மன் கில்லும் 74 ரன்கள் எடுத்து அவுட்டானார்.

இஷான் கிஷன் 18 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, சூர்யகுமார் யாதவ் மற்றும் கே.எல்.ராகுல் இணைந்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச்சென்றனர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சூர்யகுமார் யாதவ் 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

மறுமுனையில் பொறுப்புடன் விளையாடிய கே.எல்.ராகுல் அரைசதம் அடித்து அணியை வெற்றி பெற செய்தார். இந்திய அணி 48.4 ஓவர்களில் 5 விக்கெட் மட்டும் இழந்து வெற்றி பெற்றது. இரண்டாவது ஒருநாள் போட்டி இந்தூரில் நாளை நடைபெற உள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in