டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டி: டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்; தென்னாப்பிரிக்காவுக்கு சவால்!

இந்தியா தென்னாப்பிரிக்கா இறுதிப்போட்டி
இந்தியா தென்னாப்பிரிக்கா இறுதிப்போட்டி
Updated on
2 min read

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங் செய்யவுள்ளது. இது தென்னாப்பிரிக்கா அணிக்கு பெரும் சவாலாக இருக்கும் என கருதப்படுகிறது.

அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகள் நாடுகளில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பை தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் இறுதிப்போட்டி பார்படாஸின் பிரிட்ஜ்டவுன் நகரில் உள்ள கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். இந்த தொடரின் பெரும்பாலான போட்டிகளில் முதலில் பேட் செய்த இந்திய அணி சிறப்பாக ஆடி ரன்களை குவித்தது குறிப்பிடத்தக்கது. அதே பார்மில் இன்றும் இந்தியா விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணியில் பெரிய மாற்றங்கள் எதுவும் இன்றி இன்றைய போட்டியில் பங்கேற்க உள்ளன. இந்த தொடரில் இந்த இரு அணிகளும் ஒரு முறை கூட தோல்வியைச் சந்திக்கவில்லை. 2007-ம் ஆண்டு நடைபெற்ற முதல் டி20 உலகக் கோப்பை தொடரை இந்தியா வென்று இருந்தது.

இந்தியா தென்னாப்பிரிக்கா இறுதிப்போட்டி
இந்தியா தென்னாப்பிரிக்கா இறுதிப்போட்டி

அதன் பின்னர் 2014-ம் ஆண்டு இறுதிப் போட்டிக்கு முன்னேறிய இந்தியா, இலங்கை அணியிடம் கோப்பையை பறிகொடுத்தது. அதன்பிறகு தற்போது இந்திய அணி டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளது. இதனால் இந்திய அணி இந்த போட்டியை வெல்வதற்கான வாய்ப்பு இருப்பதாக ரசிகர்கள் தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த தொடரில் விராட் கோலி பார்மில் இல்லாவிட்டாலும், ரோகித் ஷர்மா, சூரியகுமார், ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்டியா ஆகியோர் பேட்டிங்கில் கைகொடுத்து வருகின்றனர். பந்துவீச்சில், பும்ரா, அக்ஷர் பட்டேல், குல்தீப், ஹர்திக் பாண்டியா ஆகியோர் அசரடித்து வருகின்றனர். அதனால் இந்திய அணி வலுவாகவே உள்ளது.

இந்தியா தென்னாப்பிரிக்கா இறுதிப்போட்டி
இந்தியா தென்னாப்பிரிக்கா இறுதிப்போட்டி

ஒரு நாள் மற்றும் டி20 உலகக் கோப்பை தொடர்களில் அந்த தென்னாப்பிரிக்கா அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது இதுவே முதல்முறை. இதனால் முழு திறனையும் பயன்படுத்தி அந்த அணி கோப்பையை வெல்ல முயற்சிக்கும் என ரசிகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.அந்த அணியில் குவிண்டன் டீ காக் பார்மில் இல்லாவிட்டாலும், மார்க்ரம், ஹென்றிக்ஸ் ஆகியோர் பேட்டிங்கிலும், ரபாடா, ஷம்சி ஆகியோர் பந்துவீச்சிலும் அசத்தி வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in