இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க வீரர் சுப்மன் கில்லுக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளதால் அவர் உலகக் கோப்பை தொடரில் முதல் போட்டியில் பங்கேற்பாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
தற்போது இந்திய கிரிக்கெட் அணியில் இளம் நம்பிக்கை நட்சத்திர வீரர் சுப்மன் கில். தொடர்ந்து கில் சிறப்பாக விளையாடி வருவதால், உலகக் கோப்பையிலும் தனது பங்களிப்பை முழுமையாக தருவார் என்று ரசிகர்கள் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணிக்கும், ரசிகர்களுக்கும் அதிர்ச்சி அளிக்கும் விதமாக, தொடக்க வீரர் சுப்மன் கில்லுக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் அவர் நாளை மறுநாள் சென்னையில் நடைபெற உள்ள, ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் போட்டியில் விளையாடுவது சந்தேகம் என கூறப்படுகிறது. இது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.
அதே நேரத்தில் விரைவில் குணமடைந்து வரும் போட்டிகள் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சுப்மன் கில் ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசைப் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.