நிறைவடையும் மக்களவைத் தேர்தல்: வியூகம் வகுக்க திரளும் இந்தியா கூட்டணி தலைவர்கள்

இந்தியா கூட்டணி தலைவர்கள்
இந்தியா கூட்டணி தலைவர்கள்

மக்களவைத் தேர்தல் இன்றுடன் நிறைவடைய உள்ள நிலையில், தேர்தல் முடிவுக்குப் பின்னர் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து விவாதிக்க இந்தியா கூட்டணி தலைவர்கள் இன்று ஆலோசனை நடத்துகின்றனர்.

இந்தியாவில் 7 கட்டங்களாக நடைபெற்ற மக்களவைத் தேர்தல் மற்றும் 4 மாநில சட்டப் பேரவைத் தேர்தல் இன்றுடன் முடிவடைகிறது. இந்நிலையில் மத்தியில் கடந்த 10 ஆண்டுகால பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசுக்கு எதிராக 28 கட்சிகள் இணைந்து அமைத்துள்ள இந்தியா கூட்டணி தலைவர்கள் தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர் மேற்கொள்ள வேண்டிய எதிர்கால நடவடிக்கைகள் குறித்து இன்று புதுடெல்லியில் கூடி ஆலோசிக்க உள்ளனர்.

தேசிய ஜனநாயக கூட்டணி, இந்தியா கூட்டணி
தேசிய ஜனநாயக கூட்டணி, இந்தியா கூட்டணி

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவின் இல்லத்தில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால், பீகார் முன்னாள் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் உள்பட அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களும் கலந்து கொள்ள உள்ளனர்.

இக்கூட்டத்தில் மக்களவைத் தேர்தலில் வாக்களிக்க வேண்டியிருப்பது மற்றும் ரெமல் புயல் பாதிப்பு மீட்பு நடவடிக்கை பணிகளை கூறி, திரிணமூல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி இக்கூட்டத்தில் பங்கேற்க முடியாது என தெரிவித்து விட்டார்.

மு.க.ஸ்டாலின், மம்தா பானர்ஜி (கோப்பு படம்)
மு.க.ஸ்டாலின், மம்தா பானர்ஜி (கோப்பு படம்)

மம்தாவைத் தவிர, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் இன்று நடைபெறும் இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. திமுக சார்பில் அக்கட்சியின் நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர்.பாலு ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க உள்ளார். நாடாளுமன்ற தேர்தல் நிறைவடைய உள்ள நிலையில் அரசியல் பரபரப்புக்கு இந்தியா தயாராகி வருகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in