இந்தியா கூட்டணியின் அடுத்த மூவ்... டெல்லியில் தலைவர்கள் இன்று முக்கிய ஆலோசனை!

இந்தியா கூட்டணி தலைவர்கள்
இந்தியா கூட்டணி தலைவர்கள்

டெல்லியில் இன்று நடைபெறும் இந்தியா கூட்டணி தலைவர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்.

இந்தியாவில் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகின. மொத்தம் உள்ள 543 மக்களவைத் தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 291 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அதில் பாஜக மட்டும் தனித்து 239 இடங்களை;f கைப்பற்றியுள்ளது. ஆட்சி அமைக்கத் தேவையான 272 தொகுதிகளை எந்த கட்சியும் தனித்து பெறாததால் கூட்டணி ஆட்சி அமையும் சூழ்நிலை நிலவுகிறது.

அகிலேஷ் யாதவ் - ராகுல் காந்தி மற்றும் பிரதமர் மோடி
அகிலேஷ் யாதவ் - ராகுல் காந்தி மற்றும் பிரதமர் மோடி

எதிர்க்கட்சியான இந்தியா கூட்டணி நாடு முழுவதும் 234 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் 99 இடங்களிலும், சமாஜ்வாதி 39 இடங்களிலும், திரிணமுல் 29 இடங்களிலும், திமுக 21 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.

கடந்த மக்களவைத் தேர்தலை ஒப்பிடுகையில் பாஜக மட்டும் 303 இடங்களில் வெற்றிபெற்ற நிலையில், இந்த தேர்தலில் 239 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. அதேபோல கடந்த தேர்தலில் 52 தொகுதிகளில் வெற்றி பெற்ற காங்கிரஸ் இந்த தேர்தலில் 99 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

இந்த நிலையில் இந்தியா கூட்டணிக் கட்சித் தலைவர்களின் கூட்டம் இன்று நடைபெறுகிறது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் இக்கூட்டம் நடக்க உள்ளது. இக்கூட்டத்தில் சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

இந்தியா கூட்டணி
இந்தியா கூட்டணி

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோரும் பங்கேற்க இருக்கின்றனர். இந்தியா கூட்டணி கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கவும், வியூகம் அமைக்கவும் திட்டம் என தகவல்கள் வெளியாகி உள்ளது.

மோடி, அமித் ஷா
மோடி, அமித் ஷா

மறுபுறம் டெல்லியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் சந்திரபாபுவின் தெலுங்கு தேசம், நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதாதளம் ஆகிய கட்சிகளும் பங்கேற்க உள்ளன. மதச்சார்பற்ற ஜனதா தளம், ஜன சேனா, லோக் ஜன சக்தி, அப்னா தளம் உள்ளிட்ட கட்சிகளும் பங்கேற்கின்றன. அதேபோல இந்த கூட்டத்தில் தமிழகத்திலிருந்து பாமக, தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும் பங்கேற்க உள்ளதாகக் கூறப்படுகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in