கார்கே வீட்டில் தொடங்கியது இந்தியா கூட்டணியின் கூட்டம்; தலைவர்கள் முக்கிய ஆலோசனை!

இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டம்
இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டம்

மக்களவைத் தேர்தல் முடிவுகளுக்கு பின்பு மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிப்பதற்காக இந்தியா கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வீட்டில் கூடி ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியை எதிர்கொள்வதற்காக நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் இந்தியா கூட்டணி என்ற பெயரில் ஓர் அணியாக திரண்டு தேர்தலை சந்தித்துள்ளன.

7வது மற்றும் இறுதிக்கட்ட மக்களவைத் தேர்தல் இன்றுடன் நிறைவடைகிறது. இந்நிலையில் வரும் 4ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளன.

தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் இந்தியா கூட்டணி தலைவர்கள் பரஸ்பரம் நாங்கள் தான் வெல்வோம் என கூறி வருகின்றனர். இச்சூழலில் தேர்தல் முடிவுகளுக்குப் பின் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிப்பதற்காக இந்தியா கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் ஆலோசனை கூட்டத்துக்கு இன்று அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

அதன்படி, டெல்லியில் உள்ள அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இல்லத்தில் தற்போது இந்தியா கூட்டணி தலைவர்களான காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அர்விந்த் கேஜ்ரிவால், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.

திமுக சார்பில் அக்கட்சியின் நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா சார்பில் அம்மாநில முதல்வர் சம்பாய் சோரன், முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் மனைவி கல்பனா சோரன், ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ், தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார் பிரிவு) தலைவர் சரத் பவார், இடதுசாரி தலைவர்களான டி.ராஜா, சீதாராம் யெச்சூரி, ஜம்மு - காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சித் தலைவர் ஃபரூக் அப்துல்லா உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்று தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in