உலக காற்று மாசு பட்டியல்… டாப் 10-ல் இந்தியாவின் 3 நகரங்கள்!

உலக காற்று மாசு பட்டியல்… டாப் 10-ல் இந்தியாவின் 3 நகரங்கள்!

உலக காற்று மாசு நகரங்கள் பட்டியலில் முதல் 10 இடங்களில் இந்தியாவின் மூன்று நகரங்கள் உள்ளன.

தீபாவளி பண்டிகைக்கு பிறகு இந்தியா முழுவதும் காற்று மாசு கடுமையாக அதிகரித்துள்ளது. ஏற்கனவே தலைநகர் டெல்லியில் காற்று மாசு மிக மோசம் என்ற நிலையில் இருந்ததால், மக்கள் கடும் அவதி அடைந்து வந்தனர்.

இந்நிலையில், தீபாவளி பண்டிகைக்கு பட்டாசுகள் வெடித்து காற்று மாசு மேலும் மோசம் அடைந்தது. தீபாவளிக்கு இரண்டு நாள் முன்பு பெய்த மழை, காற்று மாசை ஓரளவு கட்டுப்படுத்தியது. ஆனாலும், மோசம் என்ற நிலையிலேயே காற்றின் தரம் தொடர்கிறது.

இந்நிலையில், சுவிட்சர்லாந்தை சேர்ந்த ஐ.கியூ.ஏர் என்ற அமைப்பு, உலக நாடுகளில் தீபாவளி பண்டிகைக்கு பின்னர், காற்று மாசுபாடு ஏற்பட்ட டாப் 10 நகரங்களின் பட்டியலை வெளியிட்டு உள்ளது. இதில், இந்தியாவின் 3 நகரங்கள் இடம் பிடித்துள்ளன.

அதில், முதலிடத்தில் தலைநகர் டெல்லி நகரம் உள்ளது. அதனை தொடர்ந்து மும்பை, கொல்கத்தா ஆகிய நகரங்கள் முறையே 6 மற்றும் 7-வது இடங்களில் உள்ளதாக அந்த அமைப்பின் பட்டியல் மூலம் தெரிய வந்துள்ளது.

டெல்லியில் காற்றின் தரக் குறியீடு 362, அதாவது மிக மோசம் என்ற நிலையில் உள்ளது. கொல்கத்தா நகரில் 282 – மோசம், மும்பை நகரில் 258 – மோசம் என்ற நிலையில் காற்றின் தரக் குறியீடு உள்ளது.

ஒவ்வோரு ஆண்டும் குளிர்கால தொடக்கத்தின்போது, இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் காற்றின் தரம் மோசமடைந்து விடுகிறது. இதனால் மக்களுக்கு, கடுமையான சுவாச கோளாறு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகின்றன.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in