மக்களவை தேர்தல்... தமிழகத்தில் மார்க்சிஸ்ட், விசிக வாக்கு வங்கி அதிகரிப்பு!

கே.பாலகிருஷ்ணன், திருமாவளவன்.
கே.பாலகிருஷ்ணன், திருமாவளவன்.

திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியில் தமிழகத்தில் போட்டியிட்ட மார்க்சிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சிகளின் வாக்கு வங்கி அதிகரித்துள்ளது.

மக்களவைத் தேர்தல் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகளையும் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி மொத்தமாக கைப்பற்றியுள்ளது. ஆனால், கடந்த தேர்தலை இந்த தேர்தலில் இந்தியா கூட்டணியைச் சேர்ந்த திமுக, காங்கிரஸ் கட்சிகளின் வாக்கு சதவீதம் குறைந்துள்ளது.

முதல்வர் மு.க.ஸ்டாலின்
முதல்வர் மு.க.ஸ்டாலின்

கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில், திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட 8 கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. அப்போது, 38 தொகுதிகளில் வெற்றி பெற்று, 53 சதவீதம் வாக்குகளைப் பெற்றன. இந்த தேர்தலிலும் 8 கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. இறுதி நிலவரப்படி, திமுக கூட்டணி 46.97 சதவீதம் வாக்குகளைப் பெற்றது.

அதேபோல், தனிப்பட்ட முறையில் கடந்த 2019-ம் ஆண்டு தேர்தலில் 33.53 சதவீதம் வாக்குகள் பெற்ற திமுக, இந்த தேர்தலில் 26.93 சதவீதமும், 12.72 சதவீதம் பெற்ற காங்கிரஸ் தற்போது 10.67 சதவீதமும், இந்திய கம்யூனிஸ்ட் 2.41 சதவீதத்துக்கு பதில் 2.15 சதவீதமும் வாக்குகளையே பெற்றுள்ளன.

ஆனால், கடந்த முறை 2.38 சதவீதம் வாக்குகள் பெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தற்போது 2.52 சதவீதமும், 1.17 சதவீதம் வாக்குகள் பெற்ற விசிக இந்த தேர்தலில் 2.25 சதவீத வாக்குகளையும் பெற்றுள்ளன. ஐயுஎம்எல் கடந்த முறையைப் போல் தற்போதும் 1.1 சதவீதமும் வாக்குகளைப் பெற்றுள்ளது.

மதிமுகவை பொறுத்தவரை, இந்ததேர்தலில் 1.24 சதவீதம் வாக்குகளைப் பெற்றுள்ளது. அரசு ஊழியர்களிடையே உள்ள அதிருப்தி, மின் கட்டண உயர்வு, பதிவுக்கட்டண உயர்வு, வீட்டு வரி உயர்வு உள்ளிட்ட காரணங்களால் திமுகவுக்கு வாக்கு சதவீதம் இந்த தேர்தலில் குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in