ஒரே நாளில் 95 உடல்கள் தகனம்... டெல்லியில் வெப்ப அலையால் உயிரிழப்பு அதிகரிப்பு!

நிகாம்போத் காட்  மயானம்
நிகாம்போத் காட் மயானம்
Updated on
2 min read

டெல்லியில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் இறப்பு எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதனால் நிகம்போத் மயானத்தில் நேற்று ஒரே நாளில் 95 உடல்கள் தகனம் செய்யப்பட்டன.

இந்தியாவில் வடமாநிலங்களில் இயல்பை விட வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக முதியவர்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக டெல்லியில் வெப்ப அலை காரணமாக உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் டெல்லியின் நிகாம்போத் காட் பகுதியில் உள்ள மயானத்தில் உடல்கள் வரிசையில் காத்திருக்கும் சூழ்நிலை நிலவி வருகிறது. இதில், முதியவர்களின் சடலங்களின் எண்ணிக்கையே அதிகமாகும்.

 வெப்ப அலை
வெப்ப அலை

டெல்லியில் உள்ள நிகாம்போத் காட் மயானத்தில் நேற்று 95 உடல்கள் தகனம் செய்யப்பட்டன. கொரோனா காலத்திற்குப் பிறகு இவ்வளவு உடல்கள் எரியூட்டப்படுவது இதுமுதல் முறை என்று காட் நிர்வாகத்தினர் கூறினர். வழக்கமாக 40 முதல் 50 உடல்கள் தான் தகனம் செய்யப்படும். கொரோனா காலத்தில் இந்த எண்ணிக்கை நூறாக உயர்ந்தது. நேற்று ஒரே நாளில் 95 உடல்கள் எரியூட்டப்பட்டன.

கடந்த ஏப்ரல் 2021-ல் ஒரே நாளில் 107 இறந்த உடல்கள் எரியூட்டப்பட்டன. அதன்பிறகு தற்போது கொளுத்தும் வெயிலால் ஏற்பட்ட பேரழிவால் இறந்தவர்களின் உடல்கள் எரியூட்டப்பட்டுள்ளன. இந்த. ஒவ்வொரு ஆண்டும் 210-230 இறந்த உடல்கள் எரிக்கப்படுகின்றன என்று கிழக்கு டெல்லியின் காஜிபூர் சுடுகாடு மேம்பாட்டுக்குழுவைச் சேர்ந்த சுனில் கூறினார். மேலும், கடந்த இரண்டு வாரங்களாக அதிகரித்து வரும் வெப்பம் காரணமாக தகனம் செய்வது நாளொன்றுக்கு பதினைந்துக்கும் அதிகமாக அதிகரித்துள்ளது என்றார்.

நிகாம்போத் காட்  மயானம்
நிகாம்போத் காட் மயானம்

டெல்லியில் நேற்று குறைந்தபட்ச வெப்பநிலை 33.8 டிகிரி செல்சியஸாகப் பதிவாகியுள்ளது, இது இயல்பை விட ஆறு டிகிரி அதிகமாகும். இது இந்த சீசன் மட்டுமன்றி, 2018 ஜூன் 13-ம் தேதிக்குப் பிறகு 6 ஆண்டுகளில் இல்லாத அதிகபட்ச வெப்பநிலையாக 34 டிகிரியாக பதிவாகியுள்ளது. அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட ஐந்து டிகிரி அதிகமாக 44.0 டிகிரியாக பதிவாகியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in