சூப்பர் மார்க்கெட்டில் ஃபிரிட்ஜை திறக்கும் போது விபரீதம்… மின்சாரம் தாக்கி சிறுமி பலி!

சூப்பர் மார்க்கெட்டில் ஃபிரிட்ஜை திறக்கும் போது விபரீதம்… மின்சாரம் தாக்கி சிறுமி பலி!

தெலங்கானாவில் சூப்பர்  மார்க்கெட்டில் சாக்லேட் எடுக்க ஃப்ரிட்ஜை திறக்க முயன்ற 4 வயது சிறுமி மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நவிபேட் கிராமத்தைச் சேர்ந்த சம்யுக்தா, சேகர் தம்பதியின் 4 வயது  மகள் ரித்திஷா விடுமுறைக்காக உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தார். விடுமுறை முடிந்து வீடு திரும்புவதற்கு முன்னர் தந்தை சேகர் தனது மகளை ஷாப்பிங் செய்ய அங்கிருந்த சூப்பர் மார்க்கெட்டிற்கு அழைத்துச் சென்றார்.

அப்போது கடையில் உள்ள ​​ஃப்ரிட்ஜில் இருந்த சாக்லேட்டை எடுக்க சிறுமி ரித்திஷா முயன்றுள்ளார். திடீரென எதிர்பாராதவிதமாக சிறுமி மீது மின்சாரம் பாய்ந்தது. இதையடுத்து தந்தை சேகர், உடனடியாக சிறுமியை காப்பாற்றினார்.

சிறுமியை அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக  மருத்துவர்கள் கூறினர். இதையடுத்து நிஜாமாபாத்துக்கு கொண்டு சென்றனர். ஆனால் குழந்தை அதற்குள் உயிரிழந்தது

இதையடுத்து குழந்தையின் உறவினர்கள் சூப்பர் மார்க்கெட் முன் தர்ணாவில் ஈடுபட்டனர். நீதி கிடைக்கும் வரை இடத்தை விட்டு நகரமாட்டோம் என உறவினர்கள் மற்றும் பெற்றோர்கள் தெரிவித்தனர். ஆனால் உரிமையாளர்  பதில் அளிக்காததால், சூப்பர் மார்க்கெட் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in