கள்ளச்சாராய உயிரிழப்புகள்: கள்ளக்குறிச்சியில் திமுக அரசை கண்டித்து தேமுதிக ஆர்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சியில் தேமுதிக ஆர்ப்பாட்டம்
கள்ளக்குறிச்சியில் தேமுதிக ஆர்ப்பாட்டம்

கள்ளச்சாராய உயிரிழப்பு விவகாரத்தில் திமுக அரசை கண்டித்து கள்ளக்குறிச்சியில் தேமுதிக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி, கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் அருந்தி சுமார் 60 பேர் வரை உயிரிழந்துள்ளனர். மேலும் நூற்றுக்கும் மேற்பட்டோர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கள்ளச்சாராய விவகாரத்தில் ஆளும் திமுக அரசின் எம்எல்ஏ-க்கள் உதயசூரியன், வசந்தம் கார்த்திகேயன் ஆகிய இருவருக்கு தொடர்பு இருப்பதாக அதிமுக, பாமக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுகளை தெரிவித்துள்ளன.

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு

இந்நிலையில் கள்ளச்சாராய விவகாரத்தில் திமுக அரசின் மெத்தனப் போக்கே இத்தனை உயிர்கள் பலியானதற்கு காரணம் எனவும், இதற்கு பொறுப்பேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும் என அதிமுக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

கள்ளச்சாராய விவகாரத்தை கண்டித்து மாநிலம் முழுவதும் நேற்று அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது. இந்நிலையில், கள்ளச்சாராய சம்பவத்தில் ஆளும் திமுக அரசின் மெத்தனப் போக்கை கண்டித்து கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே, தேமுதிக சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தேமுதிக கண்டன ஆர்ப்பாட்டம்
தேமுதிக கண்டன ஆர்ப்பாட்டம்

இதில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பங்கேற்று பேசுகையில், “கடந்த 30, 40 ஆண்டுகளாக இங்குள்ள கல்வராயன்மலையில் கள்ளச்சாராயம் காய்ச்சி இங்குள்ள அத்தனை பேரையும் குடிகாரர்களாக மாற்றியதுதான் திமுக அரசின் சாதனையே ஒழிய வேறு ஒரு சாதனையுமில்லை.

காலையில் குடிப்பவர்களை குடிகாரர்கள் என்று சொல்லக்கூடாது என அமைச்சர் முத்துச்சாமி கூறுகிறார் என்றால் இதை விட தமிழகத்துக்கு ஒரு தலைகுனிவு என்ன இருக்கிறது?” என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in