தமிழ்நாட்டில் 6 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடமாற்றம்!

தமிழ்நாட்டில் 6 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடமாற்றம்!

தமிழ்நாட்டில் 6 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தலைமைச் செயலாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதுதொடர்பாக தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும தலைமை நிர்வாக அதிகாரியாக காயத்ரி கிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

விஜய கார்த்திகேயன் ஐ.ஏ.எஸ்
விஜய கார்த்திகேயன் ஐ.ஏ.எஸ்

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய இணை மேலாண் இயக்குநராக விஜய கார்த்திகேயன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டுக் கழக நிர்வாக இயக்குநராக ஸ்ரேயா பி.சிங் நியமிக்கப்பட்டுள்ளார்.

மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை ஆணையராக ஜெயகாந்தன் மீண்டும் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சிறப்புத் திட்ட செயலாக்கத்துறை துணை செயலாளராக பிரதாப் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் துறை இணை செயலாளராக ரத்னா நியமனம் செய்து தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in