நீட் குறித்து விஜய் பேசிய கருத்துகளை நான் வரவேற்கிறேன் - அண்ணாமலை அதிரடி

அண்ணாமலை
அண்ணாமலை
Updated on
2 min read

அரசியல் தலைவராக நீட் குறித்து விஜய் பேசிய கருத்துக்கு நான் வரவேற்பு தெரிவிப்பேன். ஏனென்றால் அவரின் நிலைப்பாடு எங்களுடைய அரசியலுக்கு நல்லது, பாஜக வளர்ச்சிக்கு நல்லது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை திருச்சியில் நடைபெற்ற ஒரு திருமண நிகழ்வில் கலந்துகொள்ள வருகை தந்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், " நீட் தேர்வை பொறுத்தவரை, நடிகர் விஜய் ஓர் அரசியல் கட்சி தலைவர் என்ற வகையில் அவரது கருத்தை சொல்லியிருக்கிறார். விஜயும் திமுக சார்ந்த அரசியலை கையில் எடுக்க போகிறார் என்றால் வரவேற்கிறேன். திமுக சார்ந்த அரசியலை அவர் கையில் எடுத்தால் பாஜக மட்டும் தனித்து இருக்கும். எங்களுக்கு அது சந்தோஷம்தான்.

தவெக தலைவர் நடிகர் விஜய்
தவெக தலைவர் நடிகர் விஜய்

ஏனெனில் எங்களுடைய இடத்தில் நாங்கள் விளையாட போகிறோம். ஏனென்றால் இங்கே பாஜக அரசியல் மட்டும் தனித்து இருக்கு, அது எங்களுக்கு இன்னும் சந்தோஷம். அரசியல் தலைவராக விஜய் பேசிய கருத்துக்கு நான் வரவேற்பு தான் தெரிவிப்பேன். ஏனென்றால் எங்களுடைய அரசியலுக்கு அது நல்லது. பாஜக வளர்ச்சிக்கு நல்லது. ஆனால் சராசரியான மனிதனாக அந்த கருத்தை பார்த்தேன் என்றால் அது சரியில்லாத கருத்து என்று தான் சொல்வேன். இன்னும் கொஞ்சம் சயிண்டிபிக்காக பார்த்து சொன்னார் என்றால், சிறப்பாக இருக்கும் என்பது எங்களுடைய கருத்து.

இருமொழியை தாண்டி மக்கள் 3 வது மொழியை விரும்புகின்றனர். தமிழக கல்விக்கொள்கையில் உருது பள்ளிகளை அதிகமாக ஆரம்பிக்க வேண்டும். உருது புத்தகங்களை அதிகம் கொண்டு வர வேண்டும் என்று இருக்கிறது. இது உருது திணிப்பு இல்லையா? இந்தி திணிப்பு எதிர்ப்பு என்று சொல்லும் திமுக, உருது திணிப்பை ஏன் எதிர்க்கவில்லை. புதிய கல்வி கொள்கையில் இருப்பதை அப்படியே திமுக அரசு கட் காப்பி பேஸ்ட் செய்துள்ளது திமுக அரசு.

அண்ணாமலை
அண்ணாமலை

செங்கோலை கேவலமாக பேசிய சு.வெங்கடேசன் மதுரை மேயருக்கு பழனிவேல் தியாகராஜனோடு சேர்ந்து செங்கோலை கொடுத்திருக்கிறார். அதற்கு நான் விமர்சனம் செய்துள்ளேன். அவர் எழுதும் கதைகளில் காலம் தான் கதாநாயகன். அந்தக் காலம் கம்னியூஸ்ட் கட்சியை உருட்டி உருட்டி கொண்டுவந்து தற்போது அந்த கட்சியை ஒன்றுமில்லாமல் செய்துவிட்டது” என்று அவர் தெரிவித்தார்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in