வைரலாகும் வீடியோ... நடுரோட்டில் முதல் மனைவியுடன் 2வது மனைவி குடுமிப்பிடி சண்டை... பரிதவித்த கணவன்!

வைரலாகும் வீடியோ... நடுரோட்டில் முதல் மனைவியுடன் 2வது மனைவி குடுமிப்பிடி சண்டை... பரிதவித்த கணவன்!

கோவையில் கணவனின் முதல் மனைவியுடன் 2-வது மனைவி நடுரோட்டில் குடுமிப்பிடி சண்டை போட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்த சிந்து (26) என்பவர் தனது கணவர் பார்த்திபனுடன் வழக்கு சம்பந்தமாக நீதிமன்றத்திற்கு வந்திருந்தார். பின்னர் வழக்கறிஞருடன் பேசிவிட்டு புறப்படும் போது, வேகமாக வந்த பெண் ஒருவர் பார்த்திபனின் இருசக்கர வாகனத்தில் இருந்து சாவியை பிடுங்கினார்.

இதனை சற்றும் எதிர்பார்க்காத பார்த்திபன் செய்வதறியாது நின்று கொண்டிருந்தார். அப்போது சாவியை பிடுங்கிய பெண்ணுக்கும், பார்த்திபனின் மனைவிக்கும் கைகலப்பு ஏற்பட்டது. ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர்.

வந்த பெண் வேடப்பட்டியை சேர்ந்த பார்த்திபனின் முதல் மனைவி உமா (33) என்பது தெரிந்தது. இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பிரிந்து வாழ்கின்றனர். இந்நிலையில், சினிமா பாணியில் முதல் மனைவியும், இரண்டாவது மனைவியும் நடுரோட்டில் சண்டையிட்டு கொண்டதை பார்த்து அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்நிலையில் காவல்துறையினர் விரைந்து வந்து இருவரையும் விலக்கிவிட்டு சமரசப்படுத்தினர். பெண்கள் ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. தாக்குதலில் காயமடைந்த சிந்துவை மீட்டு போலீஸார் கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அவர் அளித்த புகாரின் பேரில் ரேஸ்கோர்ஸ் போலீஸார் உமா மீது வழக்குப்பதிவு செய்தனர். இதேபோல் உமா அளித்த புகாரின் அடிப்படையில் சிந்து மற்றும் பார்த்திபன் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் வாசிக்கலாமே...

உஷார்... தமிழகத்தின் 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

பிரபல கால்பந்து ஜாம்பவான் ராபர்ட் சார்ல்டன் காலமானார்! ரசிகர்கள் இரங்கல்!

பரபரப்பு… அதிமுக கவுன்சிலர் வெட்டிக்கொலை!

அதிர்ச்சி... புழல் சிறையில் பெண் கைதி தூக்கிட்டு தற்கொலை!

அரையிறுதியில் இந்தியா அதிர்ச்சி தோல்வி... வாக்குவாதத்தால் பரபரப்பு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in