எங்கெல்லாம் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை? முழு விவரம்!

எங்கெல்லாம் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை? முழு விவரம்!

கனமழை எதிரொலியாக தஞ்சை, மயிலாடுதுறை, திருவள்ளூர், திருவாரூர், கடலூர், மயிலாடுதுறை, திருவண்ணாமலை, விழுப்புரம், நாகை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக  இடங்களில் இரவு முதல் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்து வருகிறது.

எனவே கனமழை எதிரொலியாக பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், அரியலூர் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் ஆனி மேரி ஸ்வர்ணா உத்தரவிட்டுள்ளார்.

மயிலாடுதுறை, திருவாரூர் மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தஞ்சை மாவட்டத்தில் தொடர் மழை பெய்வதால் பள்ளி, கல்லூரிகளுக்கு  விடுமுறை என மாவட்ட ஆட்சியர்  தீபக் ஜேக்கப் அறிவித்துள்ளார்.

அதே போல், திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, கனமழை எதிரொலியாக மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

கடலூர், விழுப்புரம், புதுச்சேரி உள்ளிட்ட இடங்களிலும் கனமழை பெய்து வருகிறது. எனவே, இன்று கடலூர், விழுப்புரம் மாவட்டத்தில்  பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் சி.பழனி அறிவித்துள்ளார். கனமழை எதிரொலியாக புதுச்சேரி, காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in