சென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை… 9 மாவட்டங்களில் விடுமுறை அறிவிப்பு!

சென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை… 9 மாவட்டங்களில் விடுமுறை அறிவிப்பு!

தொடர் கனமழை காரணமாக சென்னையில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழை மெல்ல மெல்ல வலுவடைந்து வரும் சூழலில் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. எனவே மாணவர்களின் நலன்கருதி மாவட்ட நிர்வாகம் சார்பில் விடுமுறை அறிவிக்கப்பட்டுகிறது.

அந்த வகையில் ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்ட கன்னியாகுமரி, நெல்லை, தேனி, தென்காசி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்த நேற்று அறிவிப்பு வெளியிடப்பட்டது.

அதைத்தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி அறிவித்தார். மதுரை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

இந்நிலையில், தொடர் மழை காரணமாக சென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். கனமழை காரணமாக சிவகங்கை மாவட்டத்திலும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in