கோகுல்ராஜ் கொலை... யுவராஜுக்கு சிறையில் முதல் வகுப்பு கோரும் அவரது மனைவி!

கோகுல்ராஜ் கொலை... யுவராஜுக்கு சிறையில் முதல் வகுப்பு கோரும் அவரது மனைவி!

கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று கோவை சிறையில் உள்ள யுவராஜுக்கு சிறையில் முதல் வகுப்பு ஒதுக்கக் கோரி அவரது மனைவி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளார். இதற்கு, பதில் மனு தாக்கல் செய்யுமாறு கோவை மத்திய சிறை நிர்வாகம் மற்றும் கோவை மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கில் மாவீரன் தீரன் சின்னமலை பேரவை தலைவர் யுவராஜுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவருக்கு முதல் வகுப்பு ஒதுக்கக்கோரி அவரது மனைவி சுவிதா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அதில், யுவராஜின் சமூக அந்தஸ்து மற்றும் அவரது கல்வித் தகுதி ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு அவருக்கு முதல் வகுப்பு ஒதுக்க உத்தரவிட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

யுவராஜ்- கோகுல்ராஜ்
யுவராஜ்- கோகுல்ராஜ்

இந்நிலையில், நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், சுந்தர் மோகன் அமர்வு முன்னிலையில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் எஸ்.காசிராஜன் ஆஜராகி, "தங்களது மனுவை முறையாக பரிசீலிக்காமல் ஆட்சியர் பரிந்துரைப்படி சிறை நிர்வாகம் நிராகரித்துள்ளது” என்றார்.

சிறைத்துறை சார்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ராஜ் திலக், ”சுவிதாவின் மனு குறித்து பதிலளிக்க அவகாசம் வேண்டும்" என்று கேட்டுக்கொண்டார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், கோவை மத்திய சிறை நிர்வாகம், கோவை மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஏப்ரல் 29-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

இதையும் வாசிக்கலாமே...

இந்த 5 தொகுதிகளில் வெற்றி இழுபறி!

தமிழ்நாட்டின் மிகப்பெரிய சந்தைக்கு 2 நாட்கள் விடுமுறை... தேர்தலை முன்னிட்டு அறிவிப்பு!

புதுச்சேரியில் இன்று முதல் 144 தடை உத்தரவு... தேர்தல் ஆணையம் அதிரடி!

தாயைப் பிரிந்த ஏக்கம்... 25 நாட்களாக தவித்த குட்டியானை உயிரை இழந்தது!

நேரிலும், செல்போனிலும் வாலிபர் காதல் டார்ச்சர்.... மனமுடைந்த பள்ளி மாணவி தற்கொலை!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in