பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் திருப்பதியில் ஹெலிகாப்டர் ஜாய்ரைடு சேவை தொடங்கப்பட்டுள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு அனைத்து பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். கோவிலுக்கு செல்லும் பக்தர்கள், அங்குள்ள சுற்றுலாத் தளங்களையும் கண்டுரசிக்கின்றனர்.
இந்நிலையில் கோவிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் பயன்பெறும் வகையில் திருப்பதியில் ஹெலிகாப்படர் ஜாய் ரைடு சேவை தொடங்கப்பட்டுள்ளது. சென்னையை சேர்ந்த ஏரோடான் என்ற நிறுவனம் இந்த சேவைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
அண்மையில் நான்கு நாட்களுக்கு ஜாய் ரைடுகளை இந்த நிறுவனம் ஏற்பாடு செய்தது. அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததை அடுத்து தற்போது ஜாய்ரைடு சேவையை ஏரோடான் நிறுவனம் தொடங்கியுள்ளது.
இதற்காக திருப்பதிக்கு கொண்டுவரப்பட்ட ஹெலிகாப்டருக்கு தும்மலகுண்டாவில் உள்ள கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி கோவில் அர்ச்சகர்கள் பூஜை செய்தனர். திருமலை தலைவர் பூமனா கருணாகர ரெட்டி சேவையை தொடங்கி வைத்தார்.
திருப்பதியில் வசிக்கும் மக்களுக்கும் திருப்பதிக்கு வரும் பக்தர்களுக்கும் மலிவு விலையில் ஹெலிகாப்டர் ஜாய் ரைடு வழங்குவதாக ஏரோடான் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த சேவை பக்தர்களுக்கு பயன் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் வாசிக்கலாமே...
உஷார்... தமிழகத்தில் 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!
பிரபல கால்பந்து ஜாம்பவான் ராபர்ட் சார்ல்டன் காலமானார்! ரசிகர்கள் இரங்கல்!
பரபரப்பு… அதிமுக கவுன்சிலர் வெட்டிக்கொலை!
அதிர்ச்சி... புழல் சிறையில் பெண் கைதி தூக்கிட்டு தற்கொலை!
அரையிறுதியில் இந்தியா அதிர்ச்சி தோல்வி... வாக்குவாதத்தால் பரபரப்பு!