திருத்தணி சுற்றுவட்டார பகுதிகளில் அதிகாலை முதல் கனமழை
திருத்தணி சுற்றுவட்டார பகுதிகளில் அதிகாலை முதல் கனமழை

வெளுத்து வாங்கும் மழை... வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி!

திருவள்ளூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிகாலை முதல் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ச்சியான் சூழல் நிலவி வருகிறது.

தமிழ்நாட்டில் உள்ள 14 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் நேற்று இரவு முதல் பல்வேறு இடங்களிலும் கனமழை முதல் மிதமான மழை வரை பதிவாகியுள்ளது. சென்னை அருகே உள்ள திருவள்ளூர் மாவட்டத்தில் திருத்தணி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 10 நாட்களாக கடுமையான வெயில் வாட்டி வதைத்தது.

பலத்த மழையால் சாலையில் தேங்கிய மழைநீர்
பலத்த மழையால் சாலையில் தேங்கிய மழைநீர்

குறிப்பாக திருத்தணி பகுதியில் 108 டிகிரி பாரன்ஹீட் அளவிற்கு வெப்பம் பதிவாகியிருந்ததால், பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வந்தனர். இந்நிலையில் இன்று காலை திடீரென திருத்தணி மற்றும் சுற்றியுள்ள காசிநாதபுரம், கார்த்திகேயபுரம், முருகம்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் இடி மின்னலுடன் கனமழை பெய்தது. இரண்டு மணி நேரத்துக்கு மேலாக பெய்து வரும் கனமழை காரணமாக அப்பகுதி பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஸ்ரீரங்கத்தில் சூறாவளி காற்றுடன் பெய்த மழையில் வேப்ப மரம் வேரோடு சாய்ந்தது
ஸ்ரீரங்கத்தில் சூறாவளி காற்றுடன் பெய்த மழையில் வேப்ப மரம் வேரோடு சாய்ந்தது

இதனிடையே நேற்று இரவு பலத்த சூறைக்காற்றுடன் திருச்சி ஸ்ரீரங்கம் சுற்று வட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்தது. இதன் காரணமாக ஸ்ரீரங்கம் கோயில் ராஜகோபுரம் அருகே உள்ள திருவள்ளுவர் வீதியில் 50 ஆண்டு பழமையான வேப்பமரம் வேருடன் சாய்ந்தது. இந்த மரம் அருகில் இருந்த வீடுகள் மீது விழுந்ததில் பலத்த சேதம் ஏற்பட்டது. மேலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். சுமார் 12 மணி நேரத்திற்கும் மேலாக மின்விநியோகம் இதுவரை சீராகவில்லை. இதையடுத்து மின்வாரிய பணியாளர்கள் மின்சார வயர்களை சீரமைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

x
காமதேனு
kamadenu.hindutamil.in