அதிர்ச்சி... கனமழை, மின்னல் தாக்குதல்; பொதுமக்கள் 8 பேர் உயிரிழப்பு

ஜார்கண்ட் மாநிலத்தில் தொடரும் கனமழை
ஜார்கண்ட் மாநிலத்தில் தொடரும் கனமழை

ஜார்கண்டில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாகவும் மின்னல் தாக்கியதாலும் 8 பேர் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து மழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

ஜார்கண்ட் மாநிலத்தில் கடந்த சனிக்கிழமை முதல் கனமழை பெய்து வருகிறது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால், பல்வேறு இடங்களில் சாலைகள், சிறிய பாலங்கள், ஆகியவை சேதமடைந்துள்ளன. இதில் 8 பேர் வரை இதுவரை உயிரிழந்துள்ளனர். தலைநகர் ராஞ்சியின் லால்பூர் பகுதியில் நிரம்பி வழிந்த சாக்கடையில் தவறி விழுந்த நபர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார். பிரசாத் (எ) சோட்டு என்ற அந்த நபரின் உடல் சுமார் இரண்டரை கிலோமீட்டர் தூரத்தில் கண்டறியப்பட்டது. இதே போல் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் மின்னல் தாக்கியதில் 7 பேர் உயிரிழந்தனர். இதனால் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் மழை காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.

ஜார்கண்ட் மாநிலத்தில் தொடரும் கனமழை
ஜார்கண்ட் மாநிலத்தில் தொடரும் கனமழை

தொடர்ந்து மழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள், மழை காலங்களில் வெட்டவெளிகளிலும், மரங்களின் அடியிலும் நிற்க வேண்டாம் என அதிகாரிகள் அறிவுறுத்தி வருகின்றனர். மேலும் மழைநீர் தேங்கக்கூடிய இடங்களில் வசிப்போர் கவனமாக இருக்குமாறும் அறிவுறுத்தி வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in