இடி, மின்னலுடன் 14 மாவட்டங்களில் இன்று கனமழை... வானிலை மையத்தின் முக்கிய அறிவிப்பு.!

மழை
மழை

தமிழ்நாட்டில் 14 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக வானிலை ஆய்வு மைய இயக்குநர் செந்தாமரை கண்ணன் வெளியிட்ட அறிக்கையில்," தென்மாவட்ட பகுதிகளின் மேல், வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. எனவே, இன்று முதல் 5-ம் தேதி வரை தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் மணிக்கு 30 முதல் 40 கி.மீ வேகத்தில் காற்றுடன், லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம்.

மழை
மழை

நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம், தர்மபுரி, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, வேலுார், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலுார் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில், லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம். இன்று முதல் 4- ம் தேதி வரை குமரிக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா, அதை ஒட்டிய தென்மாவட்ட கடலோர பகுதிகளில், சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கி.மீ வேகத்திலும், இடையிடையே 65 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும். இதே போல தென்மேற்கு வங்கக் கடலின் மத்திய பகுதிகளில், சூறாவளி காற்று மணிக்கு, 45 முதல் 55 கி.மீ வேகத்திலும், இடையிடையே 65 கி.மீ வேகத்திலும் வீசலாம்.

கடல்
கடல்

தெற்கு மற்றும் அதையொட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல், அந்தமான் கடல் பகுதிகளில், சூறாவளி காற்று மணிக்கு 35 முதல் 45 கி.மீ வேகத்திலும், இடையிடையே 55 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும். இந்நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம்" என்று கூறப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in